Published:Updated:

கோவை: கல்லூரி மாணவி தற்கொலை; பணம் கேட்டு மிரட்டிய இளைஞர், தாய் கைது! - அதிர்ச்சிப் பின்னணி

தற்கொலை
தற்கொலை ( Representational image )

கோவை கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரும் அவரின் தாயும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த மாணவியும் அவிநாசி சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த கேசவ்குமார் என்ற மாணவரும் காதலித்தது தெரியவந்தது.

கோவை
கோவை
பணம் கேட்டு மிரட்டியதால் மாணவி தற்கொலை; மிரட்டிய நபருக்கு வலைவீசும் கோவை போலீஸ்!

ஒருகட்டத்தில், கேசவ்குமார் அந்த மாணவியை மிரட்டிப் பணம் பறித்துவந்திருக்கிறார். `பணம் தராவிட்டால் உன்னுடைய படங்களை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன்’ என்றும் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, தலைமறைவாகியிருந்த கேசவ்குமாரை மானாமதுரையிலுள்ள அவர்களது வீட்டில்வைத்து கைதுசெய்துள்ளனர். பணம் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு கேசவ்வின் தாய் மங்கையர்கரசியும் உடைந்தையாக இருந்துள்ளார். இதன் காரணமாக கேசவ்குமாருடன், மங்கையர்கரசியும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேசவ்குமார்
கேசவ்குமார்

இந்தநிலையில், கேசவ்குமாரின் செல்போனை சோதனை செய்து பார்த்தபோது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கேசவ்குமார் பெரிய தாதாபோல கத்தி, அரிவாள்களுடன் வலம்வரும் வீடியோக்களும், மாணவர்களை அடிக்கும் வீடியோக்களும் இருந்துள்ளன.

சேகவ்குமார் கல்லூரி அருகே நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளார். காதலித்த மாணவியை மட்டுமல்லாமல், தனது ஜூனியர் மாணவர்களை அடித்து, மிரட்டிப் பணம் பறிப்பது, தனது நண்பர்கள் மூலம் தகவல் கிடைக்கும் கல்லூரி மாணவிகளை மிரட்டிப் பணம் பறிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதில் கேசவ்குமாரின் நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மங்கையர்கரசி
மங்கையர்கரசி

கேசவ்குமாரின் இந்த மோசமான நடவடிக்கைகளால் அவர் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனாலும் தொடர்ந்து அந்த அறையில் தங்கியிருந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவர்களைத் தீவிரமாக விசாரித்தால் மேலும் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

எனவே, சிங்காநல்லூர் போலீஸார் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு