Published:Updated:

கோவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்! - சிசிடிவியால் சிக்கினார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செயின் பறிப்பில் கைதான காங்கிரஸ் இளைஞர்
செயின் பறிப்பில் கைதான காங்கிரஸ் இளைஞர்

கோவை குனியமுத்தூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைதுசெய்யப்பட்டார்.

கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள எம்.எஸ்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். அவரின் மனைவி தனலட்சுமி. சம்பவத்தன்று தனலட்சுமி பொருள்கள் வாங்குவதற்காக மளிகைக்கடைக்கு சென்றிருக்கிறார்.

சிசிடிவி
சிசிடிவி
கோவை விமானப்படை பாலியல் வழக்கு: அதிகாரியை போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

அப்போது, மாஸ்க் அணிந்தபடி வந்த இளைஞர் ஒருவர் மளிகைக் கடையில் சிகரெட் வாங்குவதுபோல தனலட்சுமியை நோட்டமிட்டிருக்கிறார்.

சிறிது நேரத்திலேயே தனலட்சுமி கழுத்தில் இருந்த 5.5 சவரன் தங்க செயினைப் பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாகச் சென்றுவிட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

செயின் பறிப்பு சிசிடிவி
செயின் பறிப்பு சிசிடிவி

இதையடுத்து கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த பைசல் ரஹ்மான் (25), 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் முகமது பைசல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்துவருகிறார். இதேபோல அவர், பி.கே.புதூர், இடையர்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது.

இதற்கிடையே, அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கோவை திமுக மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் ஆகியோருடன் எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு