Published:Updated:

`75 கிலோ வெடி மருந்து... கோவை கார் வெடிப்பில் யாருக்கெல்லாம் தொடர்பு?' - காவல் ஆணையர் தகவல்

காவல் ஆணையர்

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

`75 கிலோ வெடி மருந்து... கோவை கார் வெடிப்பில் யாருக்கெல்லாம் தொடர்பு?' - காவல் ஆணையர் தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
காவல் ஆணையர்

கோவை கார் வெடிப்பு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``வெடித்த மாருதி 800 கார் இதுவரை 10 கைகள் மாறியிருக்கிறது. அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் மாலைக்குள் பிடித்து விசாரித்தோம்.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இந்த வழக்கில் ஐந்து பேரை கைதுசெய்து புலன் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் அடிப்படையில், வழக்கின் பிரிவுகளை மாற்றியிருக்கிறோம். அதன்படி கைதானவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. காவல் அதிகாரிகள் அருகிலேயே ரோந்துப் பணியில் இருந்தனர். அதன் காரணமாகத்தான் வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்ததாகத் தகவல் உள்ளது. உயிரிழந்த  ஜமேசா முபின் வீட்டிலிருந்து பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல்,

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

அலுமினியம் பவுடர், சல்பர் என 75 கிலோ வெடி மருந்துக்கான வேதி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

யூகங்கள் அடிப்படையில் நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பவம் நடப்பதற்கு முன்பு 2 சிலிண்டர், 3 டிரம்களை தூக்கிச் சென்ற சி.சி.டி.வி தான் வெளியானது. தடயவியல் அறிக்கை கிடைத்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஜமேசா முபின்
ஜமேசா முபின்

இப்போது கைதுசெய்யப்பட்டவர்களை, 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ விசாரித்திருக்கிறது. அது குறித்தும் விசாரிக்கிறோம். ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகிய மூன்று பேர் உண்மையை தெரிந்துகொண்டுதான் முபினுக்கு உதவி செய்திருக்கின்றனர்” என்றார்.