Published:Updated:

``குப்பையை எடுக்கத்தானே நீங்க இருக்கீங்க!" - கோவையில் திமுக கவுன்சிலரைத் தாக்கிய இளைஞர்

கோவை

கோவை 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலரிடம், இளைஞர் ஒருவர் பிரச்னை செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``குப்பையை எடுக்கத்தானே நீங்க இருக்கீங்க!" - கோவையில் திமுக கவுன்சிலரைத் தாக்கிய இளைஞர்

கோவை 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலரிடம், இளைஞர் ஒருவர் பிரச்னை செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கோவை

கோவை 20-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மரியராஜ். கணபதி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் வீடுகளைவிட தொழில் நிறுவனங்கள் அதிகம். தி.மு.க கவுன்சிலரான மரியராஜ் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் அதிக அளவில் குப்பைகளைக் கொட்டிவந்ததாகவும்,

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

அது குறித்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர்களிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. அது விவாதமாக மாறி, அந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த ஓர் இளைஞர் கவுன்சிலரைத் தாக்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, மரியராஜ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது குறித்து மரியராஜ் கூறுகையில், ``அது எங்கள் பகுதிதான். கடந்த ஒரு மாதமாக அதைச் சுத்தப்படுத்தி பராமரித்துவந்தோம். ‘ஏன் குப்பை போடுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘குப்பையை எடுக்கத்தானே கவுன்சிலர் இருக்கீங்க?’ எனக் கூறினார்.

மரியராஜ்
மரியராஜ்

‘உங்களிடம் பேசிப் பயனில்லை. உங்கள் ஓனரிடம் பேசிக்கொள்கிறேன்’ என்றபோது வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாங்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். உடனடியாக அவர்களைக் கைதுசெய்தனர்.

குடிபோதையில் இருந்த இவர்களை ஓனர் வந்து அடித்துவிட்டார். சரி மேற்கொண்டு பிரச்னை வர வேண்டாம் என்பதால் ஸ்டேஷன் பெயிலில் வெளியில் விட்டுவிட்டார்" என்றார். இது குறித்து சரவணம்பட்டி போலீஸாரிடம் கேட்டபோது, ``பிரச்னை நடந்தது உண்மைதான். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது
கைது

ஆனால், இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர்” என்றனர். கவுன்சிலரிடம் பிரச்னை செய்தவரின் உரிமையாளர், தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவருக்குப் பழக்கமானவராம். இதனால் இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.