Published:Updated:

`இரவுநேரத்தில் வசூல் வேட்டை?!'- சந்தேகத்தால் சிக்கிய கோவை ஜி.எஸ்.டி அதிகாரிகள்

ஜி.எஸ்.டி அதிகாரிகள்
ஜி.எஸ்.டி அதிகாரிகள்

`ஜி.எஸ்.டி அதிகாரிகள்' எனக் கூறிக்கொண்டு இருவரும் ஆய்வு மேற்கொண்டபோது சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் அவர்களை சிறை பிடித்தனர்.

கோவை, சின்னவேடம்பட்டி பகுதியில் நேற்றிரவு தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு இருவர் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளனர். அப்போது, ஒரு தனியார் நிறுவனத்தில், `ஜி.எஸ்.டி அதிகாரிகள்' எனக் கூறிக்கொண்டு இருவரும் ஆய்வு மேற்கொண்டபோது சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் அவர்களை சிறை பிடித்தனர்.

வசூல் பணம்
வசூல் பணம்

பின்னர், அவர்கள் இருவரையும் சரவணம்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார், இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் மத்திய ஜி.எஸ்.டி உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இவர்கள் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரிடமும் சரவணம்பட்டி போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

ஜி.எஸ்.டி விவகாரம்... 50 போலி நிறுவனங்கள்... 50 கோடி ரூபாய் மோசடி!

இவர்களில் ஒருவர் பெயர் புவிராஜ் என்றும் மற்றவர் பெயர் சுல்தான் என்றும் கூறப்படுகிறது. புவிராஜ் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் தலைமை ஹவில்தார் ஆகப் பணி செய்து வருகிறார்.

இதுதொடர்பாக ஜி.எஸ்.டி அலுவலக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``எத்தனை பேர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது. சம்பந்தப்பட்ட இருவரும் எங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்தான். போலீஸ் விசாரணை அறிக்கை நிறைவடைந்து, அவர்கள் கொடுக்கும் விவரத்தின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்கின்றனர் உறுதியாக.

பின் செல்ல