Published:Updated:

`கடனை அடைத்தால்தான் தனிக்குடித்தனம்!'- பெற்றோரின் கண்டிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்தம்பதி

கோவை அருகே, குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே கயிற்றில் கணவன் - மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்த தம்பதி
தற்கொலை செய்த தம்பதி

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள பொண்ணான்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவராஜ் (22). இவர் தனியார் பைப் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த கிருத்திகா (20) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பொண்ணான்டம்பாளையம்
பொண்ணான்டம்பாளையம்

இருவரும் கேசவராஜின் தந்தை ஜெய்சங்கர் மற்றும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

``தற்கொலை பண்ற வயசா; அந்தப் பிஞ்சுகளுக்கு என்ன தெரியும்?"- வாளையார் சிறுமிகள் வழக்கில் தாய் வேதனை

இந்நிலையில் நேற்று காலை 9 மணியைக் கடந்தும் கேசவராஜ், கிருத்திகா தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தார் ஜன்னலை உடைத்துப் பார்த்தனர். அப்போது கேசவராஜ், கிருத்திகா இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இதுகுறித்து உறவினர்களிடம் பேசியபோது, ``கேசவராஜும் கிருத்திகாவும் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால், கேசவராஜின் பெற்றோர், `வீட்டுக்கடன் இருக்கிறது. அதை அடைத்துவிட்டு தனிக் குடித்தனம் போங்கள்' என்று கூறியுள்ளனர்.

இதனால் கணவன்-மனைவி இருவரும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்த முடிவு எடுப்பார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை" என வேதனையோடு தெரிவித்தனர்.