Published:Updated:

கோவை: மனைவியின் நிறுவனத்திலேயே ரூ.4 கோடி `சுருட்டிய’ கணவர்... சிக்கியது எப்படி?

கைது

ஜி.எஸ்.டி பணம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஜிஷா, இதுகுறித்து விசாரித்தபோதுதான் கணவன் தன்னை ரூ.4 கோடி வரை ஏமாற்றிய விவகாரம் தெரியவந்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட ரஞ்சித்குமார் தலைமறைவானார்.

கோவை: மனைவியின் நிறுவனத்திலேயே ரூ.4 கோடி `சுருட்டிய’ கணவர்... சிக்கியது எப்படி?

ஜி.எஸ்.டி பணம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஜிஷா, இதுகுறித்து விசாரித்தபோதுதான் கணவன் தன்னை ரூ.4 கோடி வரை ஏமாற்றிய விவகாரம் தெரியவந்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட ரஞ்சித்குமார் தலைமறைவானார்.

Published:Updated:
கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜிஷா. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதில் தன் கணவர் பெயர் ரஞ்சித்குமார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர். தன் பெற்றோர் துபாயில் நகைக்கடை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால், திருமணத்தின்போது ஜிஷாவுக்கு 500 சவரன் வரை நகை போட்டு, ஒரு நிறுவனத்தையும் தொடங்கி வைத்துள்ளனர். அதில், ரஞ்சித் பொது மேலாளராகவும், ஜிஷா உதவிப் பொது மேலாளராகவும் இருந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு கலைச்செல்வி என்ற பெண், அகவுண்ட்ஸ் பிரிவில் பணிக்குச் சேர்ந்துள்ளார். இதையடுத்து ரஞ்சித் மற்றும் கலைச்செல்வி இணைந்து நிறுவனத்தின் சார்பாக செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி, வருமானவரி எதையும் கட்டாமல் இருந்துள்ளனர்.

கலைச்செல்வி
கலைச்செல்வி

அதேநேரத்தில், அவற்றையெல்லாம் கட்டியதாக போலியான பில்களைத் தயார் செய்து ஏமாற்றி வந்துள்ளனர். ரஞ்சித் மற்றும் கலைச்செல்வி வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை நடந்துள்ளது. மேலும், வீடு மற்றும் நிலத்தை வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி பணம் கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஜிஷா, இதுகுறித்து விசாரித்தபோதுதான் கணவன் தன்னை ரூ.4 கோடி வரை ஏமாற்றிய விவகாரம் தெரியவந்திருக்கிறது. சுதாரித்துக் கொண்ட ரஞ்சித்குமார் தலைமறைவாகிவிட்டார்.

மோசடி
மோசடி

இதையடுத்து ஜிஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த போலீஸார், ரஞ்சித் மற்றும் கலைச்செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் ஒரு காரை பறிமுதல் செய்த போலீஸ், மற்ற சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.