Published:Updated:

கோவை: மோசடி வழக்கு... குடும்பத்துடன் விபரீத முடிவெடுத்த ஜோதிடர் - நடந்தது என்ன?!

தற்கொலைக்கு முயன்ற ஜோதிடர்

மோசடிப் புகாரில் கோவை போலீஸ் வழக்கு பதிவுசெய்ததால், இந்து மக்கள் கட்சி ஜோதிடப் பிரிவைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரின் தாய் உயிரிழந்தார்.

கோவை: மோசடி வழக்கு... குடும்பத்துடன் விபரீத முடிவெடுத்த ஜோதிடர் - நடந்தது என்ன?!

மோசடிப் புகாரில் கோவை போலீஸ் வழக்கு பதிவுசெய்ததால், இந்து மக்கள் கட்சி ஜோதிடப் பிரிவைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரின் தாய் உயிரிழந்தார்.

Published:Updated:
தற்கொலைக்கு முயன்ற ஜோதிடர்

சென்னையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருகிறார். அவருக்கு செங்கல்பட்டில் நிலம் இருந்திருக்கிறது. அதில் சில பிரச்னைகள் நிலவவே, அது தொடர்பாக இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் பிரசன்னா என்கிற பிரசன்ன சுவாமிகள் என்பவரை அணுகியிருக்கிறார். தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் பிரச்னையைச் சரிசெய்து தருவதாகச் சொல்லி, கருப்பையாவிடம் பிரசன்னா ரூ.25.59 லட்சம் வரை வாங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

பிரசன்னா என்கிற பிரசன்ன சுவாமிகள்
பிரசன்னா என்கிற பிரசன்ன சுவாமிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் பிரச்னை சரியாக மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என கருப்பையாவிடம் 15 சவரன் தங்க நகையும் வாங்கியிருக்கிறாராம். ஆனால், அதன் பிறகும்கூட கருப்பையாவின் நிலப் பிரச்னை சரியாகவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்கு பிரசன்னா நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவந்திருக்கிறார். இதையடுத்து கருப்பையா, பிரசன்னா மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதை எதிர்பார்க்காத பிரசன்னா மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். பிரசன்னா, அவர் மனைவி, தாய், மகள்கள் ஆகியோருடன் விஷம் குடித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

இதில் ஒரு மகள் விஷம் குடிக்காமல் தப்பிச் சென்று அருகில் உள்ளவர்களிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவர்கள் அனைவரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் பிரசன்னாவின் தாய் கிருஷ்ணகுமாரி மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். பிரசன்னா, மனைவி, மகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்கொலை முயல்வதற்கு முன்பு பிரசன்னா ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதில், “பொய்யான தகவலைச் சொல்லி வழக்கு போட்டிருப்பதால் மனமுடைந்திருக்கிறோம்.

குடும்பத்துக்கே பிரச்னையை உருவாக்குவதால், எங்களுடைய முடிவை தேடிக்கொள்ளலாம் என்றிருக்கிறோம். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களது இந்த முடிவுக்கு சங்கரன், கருப்பையாதான் காரணம். எங்களது நிலை இன்னொரு ஜோதிடருக்கு வரக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.