Published:Updated:

ஆபாசமாக மிரட்டிய கடன் ஆப் நிறுவனம் - கோவை ஐடி ஊழியர் தற்கொலை!

தற்கொலை

கடன் ஆப் நிறுவனத்தின் ஆபாச மிரட்டலால் கோவை ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆபாசமாக மிரட்டிய கடன் ஆப் நிறுவனம் - கோவை ஐடி ஊழியர் தற்கொலை!

கடன் ஆப் நிறுவனத்தின் ஆபாச மிரட்டலால் கோவை ஐடி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
தற்கொலை

கடன் ஆப்களால் ஏற்படும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அவசரப் பயன்பாட்டுக்காகப் பலரும், கடன் ஆப்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கூடுதல் வட்டி போட்டு, அதை வசூலிக்க மிக மோசமாகவும், தரக்குறைவான யுக்தியையும் கடன் ஆப் நிறுவனங்கள் கையாள்கின்றன என்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

கடன் ஆப்!
கடன் ஆப்!
சித்தரிப்புப் படம்

கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்மார்ட் லோன் என்கிற ஆப்பில் கடன் வாங்கியுள்ளார். வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டவே, அந்தப் பெண் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மயிலாடுதுறை மாவட்டம், ஏத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர் தனது சகோதரர்களுடன் கோவை கணபதி பகுதியில் தங்கி, ஓர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். ஆப் மூலம் ரூ.12,108 கடன் வாங்கியிருந்தார். கடன் தொகையை சரியாகச் செலுத்தாத காரணத்தால், அந்த கடன் ஆப் நிறுவனத்திலிருந்து, பாரதிராஜாவை அழைத்து தொடர்ந்து மிரட்டிவந்ததாகக் கூறப்படுகிறது.

மிரட்டல்
மிரட்டல்
சித்தரிப்புப் படம்

ஒருகட்டத்தில் அவரின் போட்டோவை ஆபாசமாக மார்ஃப் செய்து, அதை அவரின் கான்டாக்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பாரதிராஜா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். அவரின் சகோதரர் வீட்டுக்கு வந்தபோது, பாரதிராஜா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீஸார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாரதிராஜா சடலமாக
பாரதிராஜா சடலமாக

`என் சாவுக்கு, கடன் ஆப் நிறுவனத்தின் ஊழியர்கள்தான் காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார் பாரதிராஜா. இந்தத் தற்கொலை குறித்து சரவணம்பட்டி போலீஸார் தற்கொலை வழக்காகப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.