Published:Updated:

கோவை:`கஞ்சா கடத்திய காதல் ஜோடி; கைதுசெய்த போலீஸ்!'

கைது
கைது ( Representational Image )

கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா கடத்தியதற்காக காதல் ஜோடி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. போதைப் பொருள்கள் விற்பது மற்றும் பயன்படுத்துவது போன்றவற்றில் பெண்களும் ஆங்காங்கே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருந்துவருகிறது.

கோவை
கோவை
சென்னை: கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த நாட்டு வெடிகுண்டு! - ஆந்திராவில் நடந்தது என்ன?

தற்போது ஊரடங்கு காலம் என்பதால், கோவையில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை. இதனால், கஞ்சா கடத்துவது அதிகரித்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கஞ்சா கடத்திய வழக்கில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பீளமேடு பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் ஒரு காதல் ஜோடி கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா என்றழைக்கப்படும் சூர்யபிரசாத் (வயது 21). சூர்யா கல்லூரிப் படிப்பை முடித்தவர். அதேபோல விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தமன்னா என்றழைக்கப்படும் வினோதினி (வயது 21). தமன்னா டிப்ளோமா நர்ஸிங் முடித்துள்ளார்.

சூர்யா
சூர்யா

இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்துத் தங்கிவந்திருக்கின்றனர். காதலித்துவரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.

இதற்கிடையே, பீளமேடு, நேரு நகர் சூர்யாவும், தமன்னாவும் சென்றபோது போலீஸார் ரோந்துப்பணியில் இருந்தனர். இவர்கள் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்தனர். அப்போது, இவர்கள் பையில் சுமார் இரண்டே கால் கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

வினோதினி
வினோதினி

இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்கு இருக்கிறதா, இவர்களின் பின்னணி என்ன என்பது குறித்து பீளமேடு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு