Published:Updated:

கோவை: `ஹலோ, காவல்கட்டுப்பாட்டு அறையா?' - போலீஸை அடிக்கடி பதறவைக்கும் வெடிகுண்டு மிரட்டல் குடிமகன்

பீர்முகமது
பீர்முகமது

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் கோவை போதை ஆசாமியை போலீஸார் கைதுசெய்தனர்.

கோவை சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகமது (37). இவர் சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, ‘மெரினா கடற்கரையில் குண்டு வெடிக்கும்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, போலீஸார் மெரினா கடற்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி: மணல் கடத்தல்; போலீஸுக்கு மிரட்டல்! - திமுக ஒன்றியப் பொறுப்பாளர் கட்சியிலிருந்து நீக்கம்

இதற்கிடையே, பீர்முகமது தொடர்ச்சியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, ‘மெரினா கடற்கரையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடிக்கும்’ என்று கூறியுள்ளார்.

செல்போன் எண்ணைக் கொண்டு போலீஸார் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அவரது விவரங்களை கோவை மாநகர போலீஸாருக்கு அனுப்பிவைத்தனர். கோவை போலீஸார், பீர்முகமதுவைக் கைதுசெய்தனர். போலீஸ் விசாரணையில், பீர்முகமது ஏற்கெனவே பலமுறை வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டது தெரியவந்தது.

கோவை
கோவை

பீர்முகமது கோவை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளார். குனியமுத்தூர் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்து கைதாகியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னை: கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த நாட்டு வெடிகுண்டு! - ஆந்திராவில் நடந்தது என்ன?

2018-ம் ஆண்டு உக்கடம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக பீர்முகமது கைதுசெய்யப்பட்டிருந்தார். 2017- ம் ஆண்டு கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பீர்முகமது
பீர்முகமது

குடிபோதையில் அவ்வப்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை பீர் முகமது வாடிக்கையாக வைத்துள்ளார். இதையடுத்து, கோவைக்கு வந்த சென்னை போலீஸார் விசாரணைக்காக பீர்முகமதுவை அழைத்துச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு