Published:Updated:

கோவை: மதுபானத்தில் முன் பகையை தீர்த்தவர் கைது! - 3 பேர் உயிரிழப்பு வழக்கில் திருப்பம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதுபானம்
மதுபானம் ( சித்தரிக்கப்பட்ட படம் )

கோவை தீபாவளி பண்டிகையின்போது, மதுகுடித்து உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவர்களுக்கு சயனைடு கலந்து கொலை செய்தவரை போலீஸ் கைது செய்துள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது மதுபோதையில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன் மற்றும் சமையல் வேலை பார்க்கும் முருகானந்தம் ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

`அந்தக் கடிதத்தில் உள்ளவர்கள்தான் அடுத்த டார்கெட்!’ -கோவை மாணவி வழக்கில் போலீஸ் ஸ்கெட்ச்

அளவுக்கு அதிகமாக மது குடித்து உயிரிழந்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 3 பேரும் போதைக்காக, மதுவில் தின்னர் கலந்து குடித்திருக்கலாம் அல்லது அது பழைய மதுபானமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இதனிடையே பிரேத பரிசோதனை முடிவில், மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது.

ராஜசேகர்
ராஜசேகர்

இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் ராஜசேகர் முன் பகை காரணமாக மதுவில் சயனைடு கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெயின்டரான ராஜசேகர், ஏற்கெனவே திருமணமானவர். மனைவி இறந்துவிட்டதால், இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் முருகானந்தம், பார்த்திபன், சக்திவேல் ஆகியோர் அவர் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கைது
கைது

இதையடுத்து, தீபாவளி பண்டிகையின்போது தன்னிடம் வெளிநாட்டு மதுபானம் இருப்பதாக அவர்களை அழைத்துள்ளார். ஆசையோடு வந்தவர்களுக்கு மதுவில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார்.

ராஜசேகர் மீது கொலை வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சயனைடு மற்றும் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு