Published:Updated:

கோவை: 16 வெட்டுக் காயங்கள்; பழிக்குப் பழி தீர்த்த போதை இளைஞர்கள்! - அதிர்ச்சி சம்பவம்

கொலை
கொலை

கோவை மதுக்கரை அருகே போதை இளைஞர்கள் முன்பகை காரணமாகப் பழிக்கு பழி தீர்க்கக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரை, போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாச்சிபாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மர்மக் கும்பல் கொடூரமாகத் தாக்கியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷ் உடலில் கிட்டத்தட்ட 16 வெட்டுக் காயங்கள் கண்டறியப்பட்டன.

கொலை
கொலை
குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட நேபாள நாட்டுப் பெண்?! - கோவை அதிர்ச்சி

இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட உதயகுமார், சந்தோஷ், ரகுகிருஷ்ணன், சஞ்சீவ்குமார், உயிரிழந்த ரமேஷ் அனைவருமே மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழி தீர்ப்பதற்காக இந்தக் கொலை நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

போதை ஊசி
போதை ஊசி

மதுக்கரைப் பகுதியில் நண்பருடன் தங்கியிருந்த ஜீவானந்தம் என்பவர் போதை ஊசிக்கு அடிமையாகியிருந்தார். அவருடன் ஒன்றாகத் தங்கியிருந்த மணிகண்டன்தான் அவருக்கு போதை ஊசி பார்ட்னர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`12.30 மணிக்கு கொலை முயற்சி; 2.30 மணிக்கு கொலை!’ -  அடுத்தடுத்த குற்றங்களை அரங்கேற்றிய கும்பல்

கடந்த ஜூன் மாதம் போதை ஊசிக்கு ஏற்பட்ட தகராறில் ஜீவானந்தத்தை மணிகண்டன் கொலை செய்துவிட்டார். ரமேஷின் வழிநடத்துதலில்தான் மணிகண்டன், ஜீவானந்தத்தைக் கொலைசெய்ததாகக் கூறப்பட்டுவந்தது. கைதான நான்கு பேரில் மூன்று பேர் ஜீவானந்தத்தின் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

கைது
கைது
representational image

ஜீவனாந்தம் கொலைக்குப் பழிக்கு பழிவாங்க, சமயம் பார்த்து காத்திருந்தனர். அதற்கான வாய்ப்பு அமைந்ததும், ரமேஷைக் கொலைசெய்துவிட்டனர் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு