Published:Updated:

கோவை: வாகனம் மோதியது தொடர்பாகத் தகராறு... கொலைவெறித் தாக்குதலில் ஒருவர் கொலை! - போராட்டம், பதற்றம்

தாக்குதல் (சித்திரிக்கப்பட்ட படம்)

கோவை சூலூர் அருகே வாகனம் மோதியது தொடர்பாக நடந்த தகராறில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

கோவை: வாகனம் மோதியது தொடர்பாகத் தகராறு... கொலைவெறித் தாக்குதலில் ஒருவர் கொலை! - போராட்டம், பதற்றம்

கோவை சூலூர் அருகே வாகனம் மோதியது தொடர்பாக நடந்த தகராறில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்.

Published:Updated:
தாக்குதல் (சித்திரிக்கப்பட்ட படம்)

கோவை சூலூர் அருகேயுள்ள பொன்னாகானி பகுதியைச் சேர்ந்தவர் ராமு என்கிற கேசவன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த கேசவன், தினக்கூலியாகப் பணியாற்றிவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பணி முடிந்து பைக்கில் வந்துகொண்டிருந்தார்.

கோவை
கோவை

பனப்பட்டி அருகே வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான மயில்சாமி என்பவரின் பைக்கும் கேசவனின் பைக்கும் மோதியுள்ளன. இதில் மயில்சாமியின் பால், சாலையில் கொட்டியது.

கேசவன் அங்கிருந்து அவசரமாகச் சென்றுவிட, இரவு அவர் வீட்டுக்கு 10-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். ``வாகனத்தை இடித்துவிட்டு மன்னிப்புக்கூட கேட்க மாட்டாயா?” என்று அவர்கள் கேசவனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி, தகராறாக மாறியுள்ளது.

கேசவன்
கேசவன்

குடிசைகள் சூறையாடப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர், கேசவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கிராமம் முழுவதும் கலவரப் பதற்றம் தொற்றிக்கொண்டது. கேசவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து சுல்தான்பேட்டை போலீஸார் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிந்து, ஏழு பேரைக் கைதுசெய்திருந்தனர். மேலும், பாதுகாப்புக்காக அந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டம்
போராட்டம்

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேசவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேசவன் மரணத்துக்கு நீதி கேட்டு, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.