Published:Updated:

கோவை: நள்ளிரவில் பெரியார் சிலை அவமதிப்பு! - சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை

கோவை பெரியார் சிலை
News
கோவை பெரியார் சிலை

கோவை பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் இருக்கிறது. அந்தப் படிப்பகம் முன்பு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெரியார் சிலைமீது மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், காவி நிறப் பொடி தூவியும் அவமதிப்பு செய்துள்ளனர்.

பெரியார் சிலை அவமதிப்பு
பெரியார் சிலை அவமதிப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைக் கண்ட பொதுமக்கள், பெரியார் படிப்பகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு திரண்ட திராவிடக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைமீது காவிச் சாயம் ஊற்றி அவமதிப்பு செய்திருந்தனர். இது திராவிட இயக்கங்கள், பெரியார் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர். ``சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்துவருகிறோம்.

சிசிடிவி
சிசிடிவி

விரைவில் மர்ம நபரைக் கைதுசெய்வோம்” என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை கண்டித்து வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.