Published:Updated:

மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு பெயரில் மனித உரிமை மீறலா? - தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

மீட்கப்பட்டவர்கள்

கோவை சாலையில் சென்ற மக்களைப் பிடித்து அடைத்துவைத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு பெயரில் மனித உரிமை மீறலா? - தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

கோவை சாலையில் சென்ற மக்களைப் பிடித்து அடைத்துவைத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

Published:Updated:
மீட்கப்பட்டவர்கள்

கோவை சுற்றுப்புறங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தைகளுடன் யாசகம் எடுப்பது, மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற மக்கள் சாலையில் சுற்றித்திரிவது அதிகரித்துவருகிறது. இதையடுத்து ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களை மீட்டுவருகின்றனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதரவு இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளித்து அடைக்கலம் கொடுப்பது, சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்த்துவைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோரை மீட்டு தொண்டாமுத்தூர் கெம்பனூர் அருகே ஒரு மலையடிவாரத்தில், வருவாய்த்துறையால் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ தன்னார்வு நிறுவனத்தின் வளாகத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள்,

போராட்டம்
போராட்டம்

பணிக்குச் சென்றவர்கள், அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்கச் சென்றவர்கள், பேருந்துக்காகக் காத்திருந்தவர்களை போலீஸ் மற்றும் தன்னார்வு அமைப்பினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. அவர்கள்மீது தாக்குதல் நடத்தி பெண்கள் உட்பட அனைவருக்கும் மொட்டை அடித்து, உடைமைகளை எரித்ததாகப் புகார் சொல்லப்பட்டது.

“சாலையில் சென்றுகொண்டிருந்த சாமானிய மக்களை இழுத்துச் சென்று, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கைவைக்கப்பட்டது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அந்தப் பகுதியில் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டம்
போராட்டம்

கிறிஸ்துவ தன்னார்வு நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தைக் கவிழ்த்து, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. விவகாரம் பெரிதானதால் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ``சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் இன்று அதிகாலை மீண்டும் அவர்கள் இருந்த இடங்களிலேயே விடப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டவர்கள்

சம்பந்தப்பட்ட தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றனர்.