சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்த மணிமாறன் மீது மோசடி, பாலியல் என்று ஏராளமான புகார்கள் உள்ளன. ஏற்கெனவே செய்த காதல் திருமணம் விவாகரத்து ஆக, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொண்டார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு நடுவே ஒரு சிட்பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி செய்த புகாரில் சிக்கினார். அங்கு பணியாற்றி வந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெடிக்கவே, கொரோனா காலகட்டத்தில் அவர் கோவை சரவணம்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினார். கடந்த ஆண்டு எதிர் வீட்டிலிருந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்றார். பெற்றோர் புகாரளிக்க, மணிமாறன் மீது போச்சோ வழக்கு பதியப்பட்டது.

மேஜிக், கணிதம், வார்த்தை விளையாட்டுகளை வைத்து அக்கம் பக்கத்தினரைக் கவரும் மணிமாறனை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பொதுப் போக்குவரத்திலேயே பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார் மணிமாறன். கடந்த டிசம்பர் மாதம் அந்த வீட்டு உரிமையாளரின் 18 வயது கல்லூரி மாணவியையும் அழைத்துச் சென்று மாயமாகிவிட்டார். சுசீந்திரம் போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.

மணிமாறனைத் தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்து, நோட்டீஸ் அடித்தும், ஊடகங்களில் விளம்பரம் செய்து தனிப்படைகள் அமைத்தும் காவல்துறை தேடிவந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் வைத்து மணிமாறன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பதியில் இரண்டு மாணவிகளையும் டீ விற்பனை செய்யவைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து கன்னியாகுமரி மாணவி காவல்துறையை அழைத்து தகவல் சொல்லியிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிறகு செல்போன் மூலம் இருப்பிடத்தைக் கண்டறிந்து,

தனிப்படை போலீஸார் திருப்பதி விரைந்து, மணிமாறனைக் கைதுசெய்துள்ளனர். மாணவிகளை பத்திரமாக மீட்ட போலீஸார், மணிமாறனைக் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.