Published:Updated:

கோவை: `அப்பார்ட்மென்ட்டில் பெண்கள் இருக்கிறார்கள்' - பாலியல் ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது

கோவை

கோவை அப்பார்ட்மென்ட்டில் பாலியல் உறவுக்கு பெண்கள் இருப்பதாகச் சொல்லி, ஆன்லைன் மூலம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

கோவை: `அப்பார்ட்மென்ட்டில் பெண்கள் இருக்கிறார்கள்' - பாலியல் ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது

கோவை அப்பார்ட்மென்ட்டில் பாலியல் உறவுக்கு பெண்கள் இருப்பதாகச் சொல்லி, ஆன்லைன் மூலம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
கோவை

கோவை பீளமேடு காவல் நிலையம் சரக எல்லைக்குட்பட்ட ஓர் அப்பார்மென்ட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற முதியவர் ஒரு புகார் அளித்தார். அதில், ``கடந்த சில மாதங்களாக இணையதளம் மூலம் எங்கள் அப்பார்ட்மென்டில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இருப்பதாகச் சொல்லி, எங்களுக்கு அவப்பெயரை உருவாக்கிவருகின்றனர்.

கோவை
கோவை

அவர்கள் வலையில் விழுபவர்களை, தவறான வழிநடத்துதல் மூலம் எங்கள் அப்பார்ட்மென்டுக்கு வரவழைத்து பணம் பறித்து ஏமாற்றிவருகின்றனர். இதனால் எங்கள் அப்பார்ட்மென்ட்டில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அந்தக் கும்பலை ட்ராக் செய்து கைதுசெய்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தோம்.

ஆணையர் பாலகிருஷ்ணன்
ஆணையர் பாலகிருஷ்ணன்

செல்போன் எண்களைக் கண்காணித்தபோது, பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்டு இந்தக் கும்பல் செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவர் இதற்கு மூளையாகச் செயல்பட்டிருக்கிறார்.

பெங்களூரில் ஓர் அப்பார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்து, 11 நபர்களை பணியமர்த்தியிருக்கிறார். அவர்கள் ஆன்லைனில் தங்களிடம் சிக்கும் நபர்களை, கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பல அப்பார்ட்மென்ட்டுகளில் பெண்கள் இருப்பதாகச் சொல்லி, பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் ஆறு பெண்கள் உட்பட மொத்தம் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது
கைது

அவர்களிடமிருந்து 10 சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லோகேண்டா என்ற வலைதளத்தில் செல்போன் எண்களைப் பதிந்து, ஜி-பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணத்தை வாங்கியுள்ளனர்.

பிறகு பணம் கொடுத்தவர்களிடம் போலியான முகவரி கொடுத்து ஏமாற்றியுள்ளனர். மேலும், பெண்களைப் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திவந்துள்ளனர். கோவையில் அதிகரித்துவரும் கஞ்சா விற்பனை குறித்து, 360 டிகிரியில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்.

கஞ்சா சாக்லேட்
கஞ்சா சாக்லேட்

ஆந்திராவிலிருந்துதான் கோவைக்கு அதிக அளவில் கஞ்சாவைக் கொண்டுவருகின்றனர். அதேபோல ராஜஸ்தானிலிருந்து கஞ்சா சாக்லேட் வருகிறது. இது குறித்து விசாரிக்க தனிப்படை போலீஸார் ராஜஸ்தானுக்குச் சென்றுள்ளனர்” என்றார்.