Published:Updated:

கோவா டு கோவை - மாணவர்களை குறிவைத்து இயங்கிய போதை நெட்வொர்க் கைது..!

கோவை

கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எல்.எஸ்.டி, கிரிஸ்டல் உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ய சென்ற இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.

கோவா டு கோவை - மாணவர்களை குறிவைத்து இயங்கிய போதை நெட்வொர்க் கைது..!

கோவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எல்.எஸ்.டி, கிரிஸ்டல் உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ய சென்ற இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.

Published:Updated:
கோவை

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக போதை கலாசாரம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை, எல்.எஸ்.டி போதை அட்டை, கஞ்சா சாக்லேட் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தாக்குதலுக்குள்ளான மருந்துக்கடைக்காரர்
தாக்குதலுக்குள்ளான மருந்துக்கடைக்காரர்

கடந்த சில நாள்களுக்கு முன்பு போதையில் ஏற்பட்ட தகராறில், கஞ்சா போதையில் இருந்த பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டார். எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் போதை மாத்திரை தராத மருந்துக்கடை உரிமையாளரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி சென்றுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பெரியநாயக்கம்பாளையம் பகுதியில் மாணவர்களுக்கு எல்.எஸ்.டி உள்ளிட்ட போதை பொருள்களை விற்பனை செய்ய சென்ற கும்பலை போலீஸ் கைது செய்திருக்கிறது. போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும்போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு காரை நிறுத்தினர்.

எல்.எஸ்.டி போதை அட்டை
எல்.எஸ்.டி போதை அட்டை

அதில் சோதனையிட்ட போது 302 எல்.எஸ்.டி போதை அட்டைகள், எம்.டி.எம்.ஏ போதை மாத்திரை, மெத் கிரிஸ்டல், கஞ்சா உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சிவராமன் என்ற இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளனர். இவர் தன் நண்பர் அருண் என்பவருடன் இணைந்து போதை பொருள்களை விற்றுவந்தது தெரியவந்துள்ளது. “இவர்கள் விற்பனை செய்யும் எல்.எஸ்.டி, எம்.டி.எம்.ஏ, கிரிஸ்டல் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் பார்டியில் பயன்படுத்துவார்கள்.

கிரிஸ்டல்
கிரிஸ்டல்

கோவா, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து போதை பொருள்களை வாங்கி, இங்கு விற்றது தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு போதை அட்டையை ரூ.1,000க்கு விற்று வந்துள்ளனர். ஏற்கெனவே சிவராமன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அருணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிவராமனிடம் இருந்து ரு.90,000 ரொக்கம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எம்.டி.எம்.ஏ
எம்.டி.எம்.ஏ

அடுத்தகட்டமாக, இவர்கள் போதை பொருள்களை வாங்கியவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என போலீஸார் தெரிவித்துள்ளனர்.