கோவை மாவட்டம், நீலம்பூர் பிரபல நட்சத்திர விடுதி அருகே ஒரு காதல் ஜோடி காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மஃப்டியில் வந்த இரண்டு போலீஸ்கார்கள், காதல் ஜோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து அவர்களிடம், ``ரூ.1 லட்சம் ரூபாய் பணம் வேண்டும். பணம் கொடுக்கவில்லையென்றால் காரில் பாலியல் தொழில் செய்வதாகக் கைதுசெய்வோம்.” என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பயந்துபோன காதல் ஜோடி, ரூ.10,000 கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அந்தச் சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சூலூர் போலீஸார், தனிப்படை அமைத்து காதல் ஜோடியிடம் பணம் பறித்தவர்கள் குறித்து விசாரித்தனர்.

தொடர் விசாரணையில் அது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தின் முதல் நிலைக் காவலர் ராஜராஜன், ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் என்று தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர் விசாரணையில் இவர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே, கண்களில் சிக்கும் காதல் ஜோடிகளை மிரட்டிப் பணம் வசூலித்துவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த இரண்டு பேர் மீதும், வழக்கு பதிந்து போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.