கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் (65) என்கிற மூதாட்டி, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் வந்த ஓர் இளம் ஜோடி அவரிடம் வழிகேட்பதுபோலப் பேச்சுக் கொடுத்துள்ளனது.
காளியம்மாள் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஜோடி அவர் கழுத்தில் இருந்த 5 ½ சவரன் தங்கச் சங்கிலியைக் பறித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டது. இது குறித்து காளியம்மாள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), சுங்கம் பகுதியைச் சேர்ந்த ப்ரியா (20) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஆகியோர் குறித்துத் தெரியவந்தது. காதலர்களான இவர்கள் இருவரும், பி.டெக் ஐ.டி படித்துவருகின்றனர்.
இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். செலவுக்குப் பணம் தேவைப்படுவதால், பெட்டிங் ஆப்பை பயன்படுத்தி பிரசாந்த் பணத்தை இழந்துள்ளார். கடன் தொல்லை அதிகரித்ததால், இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு முன்பு தன் வீட்டிலிருந்த 30 சவரன் நகையை பிரசாந்த் திருடியிருக்கிறார். திருடியது மகன் என்று தெரிந்ததும், அவரின் பெற்றோர் அந்தப் புகாரை வாபஸ் வாங்கியுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஐந்து சவரன் நகையைப் பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். இருவரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, நகைப் பறிப்பில் ஈடுபடப்போவதாக பிரசாந்த் தன்னிடம் கூறவில்லை என்றும், நகையைப் பறித்த பிறகுதான் தனக்கு விஷயமே தெரியும் என்றும் ப்ரியா போலீஸில் தெரிவித்திருக்கிறார்.