Published:Updated:

கோவை: பகையாளியைக் கொல்ல ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய ஆசாமி கைது - சிக்கியது எப்படி?!

ஆன்லைன்

பகையாளியைக் கொலைசெய்ய ஆன்லைன் மூலம் வெடிபொருள்களை வாங்கிய நபரை கோவை போலீஸார் கைதுசெய்தனர்.

கோவை: பகையாளியைக் கொல்ல ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய ஆசாமி கைது - சிக்கியது எப்படி?!

பகையாளியைக் கொலைசெய்ய ஆன்லைன் மூலம் வெடிபொருள்களை வாங்கிய நபரை கோவை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
ஆன்லைன்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலிருந்து ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அவர் தன் சகோதரர் மூலம் ஆன்லைனில் வெடிமருந்துக்குத் தேவையான வேதிப்பொருள்களை வாங்கியது தெரியவந்தது.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

அந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே கோவையில் மற்றொரு நபர் ஆன்லைன் மூலம் வெடிபொருள்களை வாங்கியது தெரியவந்திருக்கிறது.

கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் வெடிபொருள்களை வாங்குபவர்கள் குறித்து போலீஸார் கண்காணித்துவந்தனர். அப்போதுதான் கோவை குரும்பப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் ஆன்லைன் கணக்கிலிருந்து சல்பர், பொட்டாசியம் போன்றவை வாங்கப்பட்டது தெரியவந்தது.

மாரியப்பன்
மாரியப்பன்

செந்தில் மொத்தப் பழ வியாபாரம் செய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் அவரிடம் ஒரு தள்ளுவண்டியில் விற்பனையாளராகப் பணியாற்றிவந்தார்.

செந்திலின் கணக்கைப் பயன்படுத்தி, மாரியப்பன் பொட்டாசியம் 100 கிராம், சல்பர் 50 கிராம் ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. அவர்மீது வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். விசாரணையில் அவர்மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

கைது
கைது

கோவில்பட்டியில் உள்ள தனது பகையாளியைக் கொலை செய்வதற்காக அவர் வெடிபொருள்களை வாங்கியதாக போலீஸில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.