Published:Updated:

`மாணவர்கள்தான் டார்கெட்!' - கோவையைப் பதறவைக்கும் கஞ்சா சாக்லேட் நெட்வொர்க்

கஞ்சா சாக்லேட் நெட்வொர்க்

கோவை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யும் கும்பல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

`மாணவர்கள்தான் டார்கெட்!' - கோவையைப் பதறவைக்கும் கஞ்சா சாக்லேட் நெட்வொர்க்

கோவை மாவட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யும் கும்பல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
கஞ்சா சாக்லேட் நெட்வொர்க்

கோவை மாவட்டம் முழுவதும் மாணவர்களிடையே போதை கலாசாரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கஞ்சா, போதை மாத்திரை என நாளுக்கு நாள் புதிய புதிய போதைப் பழக்க வழக்கங்கள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில், சமீபகாலமாக கோவையில் கஞ்சா சாக்லேட் பழக்கம் பரவலாகிவருகிறது.

கோவை
கோவை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரம் போலீஸார் நடத்திய சோதனையில் ஒரு கடையிலிருந்து ரூ.40,000 மதிப்பிலான 40 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், ரத்தினபுரி போலீஸார் வாகன சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் சாக்லேட்டுகள் இருந்திருக்கின்றன. சோதனை செய்து பார்த்தபோது, அது கஞ்சா சாக்லேட் எனத் தெரியவந்திருக்கிறது.

பாலாஜி
பாலாஜி

இதையடுத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பாலாஜி என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 20.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரியவந்திருக்கிறது. சராசரியாக ஒரு சாக்லேட்டை ரூ.100-க்கு விற்றுவருகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய டீம் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அதன்படி இந்த டீமுக்கு டெயில் சுரேஷ் என்பவர் தலைவனாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டெயில் சுரேஷ் உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் அவர்களைத் தேடிவருகின்றனர்.