Published:Updated:

கோவை: ஹோம் டூர் போட்ட யூடியூபர்... திருடராக மாறிய சப்ஸ்க்ரைபர்..!

யூடியூபர் சுஹைல்

பிரபல யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கோவை: ஹோம் டூர் போட்ட யூடியூபர்... திருடராக மாறிய சப்ஸ்க்ரைபர்..!

பிரபல யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
யூடியூபர் சுஹைல்

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவர் `சுஹைல் விலாகர்’, `சைபர் தமிழா’ என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்திவருகிறார். இவரின் சேனல்களை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இவரின் மனைவி பாபினா (28).  இந்தத் தம்பதிக்கு ஏழு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

புது வீட்டில் மனைவியுடன் சுஹைல்
புது வீட்டில் மனைவியுடன் சுஹைல்

இவர்கள் சமீபத்தில் கே.ஜி சாவடி பிச்சனூர் பகுதியில் ஒரு புதிய வீடு கட்டி குடிபெயர்ந்திருக்கின்றனர். வீட்டில் நடக்கும் அன்றாட குடும்ப நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுவந்திருக்கிறார்.  

அப்போது, தனது புதிய வீட்டை ஹோம் டூராக சுற்றிக் காட்டியும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வீடு, இரண்டு கார்கள், இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியுடன் வாழ்வதாக  தெரிவித்திருக்கிறார். இதனிடையே, நேற்று முன்தினம் காலை சுஹைலின் வீட்டுக் கதவைத் தட்டி மர்ம நபர் உள்ளே சென்றிருக்கிறார்.

திருடன் புகுந்த சிசிடிவி வீடியோ
திருடன் புகுந்த சிசிடிவி வீடியோ

பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட சுஹைல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை அதே பகுதியில் மடக்கிப் பிடித்திருக்கிறார்.

பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அனுராமன் (25), என்பதும் தெரியவந்திருக்கிறது. “நான் சுஹைல் யூடியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர். அவர் மிகக் குறுகிய காலத்தில் யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதித்திருக்கிறார். அதை மிக எளிதாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரியிலிருந்து வந்தேன்.

கைதுசெய்யப்பட்ட அனுராமன்
கைதுசெய்யப்பட்ட அனுராமன்

நள்ளிரவு சுஹைலின் வீட்டை அடைந்துவிட்டேன். இரவு முழுவதும் மொட்டை மாடியிலேயே படுத்துத் தூங்கி காலையில் வீட்டுக்குள் சென்றேன்” என்று அனுராமன் விசாரணையில் கூறியிருக்கிறார். போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.