ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. உலர் பழங்களை விற்பனை செய்துவருகிறார். தொழில் நிமித்தமாகக் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு, கமிஷனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் என்று ஓர் எஸ்.எம்.எஸ் வந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, ஶ்ரீதேவி அந்த எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். எதிரில் பேசியவர், தான் கோவையைச் சேர்ந்த கௌதம் என்றும், பணம் ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
``ரூ.1 கோடி கடன் பெற்றுத் தருகிறேன். எனக்கு ரூ.10 லட்சம் கமிஷன் தர வேண்டும்” என்று கௌதம் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீதேவி, தன் மகன் ரமணா மூலம் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அருகே ரமணாவை வருமாறு கூறியுள்ளனர்.
ரமணா அங்கு வந்த போது, அட்டைப்பெட்டி ஒன்றைக் கொடுத்து, அதில் ரூ.1 கோடி பணம் இருப்பதாகக் கூறியுள்ளனர். அதை நம்பி ரமணா அவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சில நொடிகளில் கௌதம் உள்ளிட்டோர் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சந்தேகத்துடன் ரமணா பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறார். அப்போது, அதில் சில பிளாஸ்டிக் பொருள்களும், பிரஷ்களும் மட்டும் இருந்துள்ளன. இது குறித்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவுசெய்த போலீஸார், இரண்டு பேரைக் கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள் தங்களது பெயரை மாற்றி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

மோசடியில் ஈடுபட்டது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜனகன் (42), செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மார்டின் அமல்ராஜ் (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.