கோவையைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், ஈரோடு மாவட்டம், காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அது நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் இரண்டு குடும்பங்களுக்கும் தெரிந்து பிரச்னையாகியுள்ளது.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த அந்த ஆணுக்கும், அவர் மனைவிக்கும் அவ்வபோது சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இரண்டு குடும்பங்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, இருவரின் திருமணம் தாண்டிய உறவை கைவிட முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் இருவரும் பிரிந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண், காதலனின் மனைவி மற்றும் 15 வயது மகளை மிகவும் ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் விதமாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரின் மனைவி கொடுத்தப் புகாரின் அடிப்படையில்

கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் இளம் பெண் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a,67b, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.