Published:Updated:

`மக்களைக் காப்பாற்ற அங்கேயே நின்றேன்' - மனநலம் குன்றியவரால் எலும்பு முறிந்த கோவை போலீஸ்காரர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை போலீஸைத் தாக்கிய மனநலம் குன்றியவர்
கோவை போலீஸைத் தாக்கிய மனநலம் குன்றியவர்

கிழிந்த உடையுடன், கையில் கத்தியுடன் போலீஸாரை நோக்கி நகர்கிறார் அந்த நபர்.

பல்வேறு காரணங்களுக்காக போலீஸார் பொதுமக்களைத் தாக்கும் காட்சி நமக்கு புதிதல்ல. ஆனால், பொதுமக்களில் சிலர் போலீஸாரைத் தாக்குவது என்பது அரிதிலும் அரிதாக நடக்கும் ஒன்று. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் கோவை ராமநாதபுரத்தில் அரங்கேறியிருக்கிறது.

தீபன்
தீபன்
கோவை விமானப்படை பாலியல் வழக்கு: அதிகாரியை போலீஸ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

கடந்த சில தினங்களாகச் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. அந்த வீடியோவில், கிழிந்த உடையுடன், கையில் கத்தியுடன் ஒரு நபர் போலீஸாரை நோக்கி நகர்கிறார். சிறிது நேரத்தில் கத்தியால் குத்தி, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரின் லத்தியைப் பிடுங்கி அவரை தாக்குகிறார். அதையடுத்து, போலீஸாரின் வாகனத்தையும் அடித்து நொறுக்குகிறார். அதைச் சுற்றி நின்றபடி பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வைரல் வீடியோ குறித்து விசாரித்தபோது, இந்தச் சம்பவம் கோவை ராமநாதபுரத்தில் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.

வீடியோவில் போலீஸ்காரரைத் தாக்கிய அந்த நபர் பெயர் தீபன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், கஞ்சா போதைக்கு அடிமையாகி மனநலம் குன்றி, சாலையில் சுற்றித் திரிந்துவந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. சாலையில் செல்வோரைத் தாக்குவதை வழக்கமாக வைத்திருக்கும் தீபன், அந்தப் பகுதியில் ரோந்து பணியிலிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கியிருக்கிறார்.

சூர்யகுமாரைத் தாக்கும் தீபன்
சூர்யகுமாரைத் தாக்கும் தீபன்

இருப்பினும், மனநலம் குன்றியவர் என்பதால், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் மனிதநேயத்துடன் தீபனை விட்டுவிட்டனர். அவரால் தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சூர்யகுமாருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. தீபனை மனநல சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் ஏட்டு சூர்யகுமாரிடம் பேசினோம். ``நான் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவன். கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறேன். அன்று நாங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தோம். தீபனைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவரால் அங்கு அவ்வப்போது பிரச்னை ஏற்படும்.

தீபன்
தீபன்

அன்றைய தினமும் அவர் அந்தப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தார். நாங்கள் அங்கு சென்றதும், ஓடிவிட்டார். பின்னர், சிறிது தூரத்திலுள்ள ஒரு கறிக்கடையிலிருந்து கத்தியை எடுத்தார். அதைக் கண்ட கறிக்கடைக்காரர் அலறியடித்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினார்.

தீபனின் கையில் கத்தியைப் பார்த்தவுடன் மக்கள், `காப்பாத்துங்க... காப்பாத்துங்க...’ என்று கூச்சலிட்டனர். கத்தி இருப்பதால் ஆரம்பத்தில் சற்றுத் தயங்கினோம். ஆனால், நாம் தயங்கினால் மக்களை யார் காப்பாற்றுவது என்று எண்ணி, தீபனின் அருகில் சென்றேன்.

அப்போது, தீபன் என்னைச் சரமாரியாகத் தாக்கினார். அதில், கையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அங்கேயே சற்று மயக்கம் வந்துவிட்டது. பிறகு மருத்துவமனைக்குச் சென்றோம். என் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். தற்போது ஓய்வில் இருக்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு