Published:Updated:

ஆபாசப்படம்... 3 சிறுவர்கள்! - கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

கோவை சுந்தராபுரம் பகுதியில் 11 வயதுச் சிறுமியை 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா காலகட்டத்திலும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஓய்வில்லை. கொரோனா வைரஸ் பதைபதைக்க வைக்கும் இந்தக் காலகட்டத்திலும் கோவையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் (11), ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

கோவை
கோவை
பாகிஸ்தானின் கொரோனாவை விஞ்சிய பாலியல் சர்ச்சைப் புகார்… அலறவிடும் அமெரிக்க அழகி சிந்தியா ரிச்சி!

சிறுமியின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாடகை வீட்டில் தங்கியபடி, அவர் தந்தையும் தந்தையின் தங்கையும் சிறுமியை வளர்த்து வருகின்றனர். குடியிருப்பின் மேல் பகுதியில் சிறுமி குடும்பத்தினரும், கீழ்ப் பகுதியில் வீட்டு உரிமையாளர் குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.

சிறுமியின் தந்தையும் அத்தையும் வேலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால், டிவி பார்ப்பதற்காக அவர் கீழ் வீட்டுக்குச் செல்வது வழக்கம். வீட்டு உரிமையாளர்களுக்கு சொந்தமாகப் புத்தகக் கடை இருப்பதால், அவர்களும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். 10-ம் வகுப்பப் படிக்கும் அவர்கள் 16 வயது மகன் மட்டும் வீட்டில் இருப்பார். ஆன்லைன் வகுப்புக்காக அந்தச் சிறுவனுக்கு வீட்டில் ஒரு ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அந்தச் சிறுவனின் நண்பன் (17) அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், மே 20-ம் தேதி டிவி பார்ப்பதற்காகச் சிறுமி அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அந்த இரண்டு சிறுவர்களும் போனில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.

மேலும், அவர்கள் அந்தச் சிறுமியையும் வலுக்கட்டாயப்படுத்தி ஆபாசப் படம் பார்க்க வைத்துள்ளனர். இதையடுத்து, அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற சிறுவர்கள், சிறுமியைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதே பகுதியில் உள்ள மற்றொரு சிறுவனையும் அழைத்து வந்து, ஆபாசப்படம் பார்த்துக்கொண்டே, மூன்று சிறுவர்களும் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது ஒரு வாரத்துக்குத் தொடர, சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. மருத்துவமனைக்குச் சென்றபோது, சிறுமி மருத்துவர்களிடம் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார்.

அதன் பிறகுதான், இந்த விஷயம் சிறுமியன் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாகக் காவல்நிலையத்துக்குத் தகவல் சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மூன்று சிறுவர்கள் மீதும் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்ஸோ பிரிவின் கீழ் மூன்று சிறுவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து, 16 வயது 17 வயது சிறுவர்கள் இருவரைப் பிடித்த போலீஸார், அவர்களை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வழக்கு குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு