Published:Updated:

கோவை: `கட்சிக் கம்பத்தில் தேசியக்கொடி!' - பா.ஜ.க பிரமுகர்மீது வழக்கு பதிவு

பா.ஜ.க - தேசியக்கொடி
பா.ஜ.க - தேசியக்கொடி

கட்சிக் கொடிக் கம்பத்தில், தேசியக்கொடியை ஏற்றிய விவகாரத்தில் கோவை பா.ஜ.க பிரமுகர்மீது தேசியக்கொடி அவமதிப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வழக்கம்போல தேசியக்கொடியை ஏற்,றி சுதந்திர தினத்தைக் கொண்டாடின. கோவை, வ.உ.சி பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

பா.ஜ.க
பா.ஜ.க
பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்! - உற்சாகத்தில் ஜீவஜோதி

அதேபோல, ஆங்காங்கே அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர். பா.ஜ.க சார்பில் அந்தந்தப் பகுதிவாரியாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில், பா.ஜ.க-வின் கோவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கணபதி பேருந்து நிலையத்தில் தேசியக்கொடியை ஏற்றி பா.ஜ.க-வினர் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர். இதில், பா,ஜ.க கணபதி மண்டலத் தலைவர் வெங்கடேஷ் கலந்துகொண்டார். அப்போது, பா.ஜ.க கட்சிக் கொடியை ஏற்றும் கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். இது தொடர்பாக போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

இதையடுத்து, கோவை மாநகர போலீஸார் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, வெங்கடேஷ் உள்ளிட்டோர்மீது தேசியக்கொடி அவமதிப்புச் சட்டத்தின்கீழ் சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, கோவையில் மேலும் சில இடங்களில் பா.ஜ.க தங்களது கட்சிக்கொடிக் கம்பத்தில், தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சுமார் 40 பா.ஜ.க பிரமுகர்கள் ஒன்றுகூடி, அனுமதியின்றி சாலையை மறித்து நோய் பரப்பும் வகையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதாக மாவட்ட மகளிரணி தலைவி ஜெயதிலகா உள்ளிட்டோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க
பா.ஜ.க

இதே காரணத்துக்காக, பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஜி.கே.எஸ் செல்வக்குமார், எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பா.ஜ.க பிரமுகர்கள்மீது காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு