Published:Updated:

`அந்தக் கடிதத்தில் உள்ளவர்கள்தான் அடுத்த டார்கெட்!’ -கோவை மாணவி வழக்கில் போலீஸ் ஸ்கெட்ச்

கோவை மாணவி தற்கொலை வழக்கில், எடுக்கப்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

“யாரையும் சும்மா விடக் கூடாது என்ற கடிதத்துடன், கோவை மாணவி தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

`பழிபோட்ட ஆசிரியர்... கண்டு கொள்ளாத பள்ளி?!’ - கோவை மாணவி தற்கொலையின் அதிர்ச்சிப் பின்னணி

இதையடுத்து, போராட்டங்கள் கைவிடப்பட்டு, மாணவியின் உடல் நேற்று வாங்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இந்நிலையில், கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சில துண்டு சீட்டு கிடைத்துள்ளது.

துணை ஆணையர் ஜெயச்சந்திரன்
துணை ஆணையர் ஜெயச்சந்திரன்

அதில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் அதேபோல வேறு யாராவது அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனரா என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் நடந்த உடனேயே, பள்ளியின் முதல்வர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி சொல்லாத காரணத்தால், பள்ளி முதல்வரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்து கைது செய்துள்ளோம். மாணவி தற்கொலை செய்ததற்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மாணவி வீட்டில் தேடும் போது சில ஆவணங்கள் கிடைத்தன.

அதில் ஒன்றுதான் அந்த துண்டு சீட்டு. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி எந்த சூழ்நிலையில் இறந்தார்?, அவரின் இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து எதிரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு