Published:Updated:

ஆன்லைன் ரம்மியால் கடன் நெருக்கடி - கோவை இளம் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

கோவை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிவந்த காவலர் ஒருவர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் ரம்மியால் கடன் நெருக்கடி - கோவை இளம் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

கோவை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிவந்த காவலர் ஒருவர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

கோவை காந்திபுரம் பகுதியில், அரசுப் பொருட்காட்சி நடைபெற்றுவருகிறது. இதில் அரசுத் துறைகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல்துறை அரங்கும் இடம்பெற்றுள்ளது.

காளிமுத்து
காளிமுத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து (29) என்ற ஆயுதப்படை காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை, அந்த அரங்கிலிருந்து துப்பாக்கி தோட்டா வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனடியாக அருகிலிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, அங்கு காளிமுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்திவந்தார்.

கோவை
கோவை

துப்பாக்கி தோட்டா வயிற்றில் பாய்ந்து, முதுகுவழியே வெளியே வந்தது தெரியவந்தது. இதற்டையே, சிகிச்சை பலனின்றி அவர் அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் அவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. காளிமுத்து ஆன்லைன் ரம்மியில் விளையாடி, ரூ.20 லட்சம் இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் கடன் நெருக்கடியில் சிரமப்பட்டுவந்திருக்கிறார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

உயிரிழந்த காளிமுத்துவுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மரணம் காவல்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.