Published:Updated:

கோவை: வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடி வெட்டிக் கொலை! - முன்விரோதம் காரணமா?

கொலை
கொலை

கோவை கணபதி அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை கணபதி, மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கரண் குமார் (30). இவர் கட்டப் பஞ்சாயத்து வழிப்பறி, கொலை, கொள்ளை அடிதடி உட்பட பல்வேறுவிதமான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தார். இவர்மீது காந்திபுரம், ரத்தினபுரி, பீளமேடு, சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொலை வழக்குகள் இருக்கின்றன.

கரண் குமார்
கரண் குமார்
ஆளே இல்லாமல் அதிரடி கொலை!

இந்தநிலையில் சிறையிலிருந்த கரண் குமார், சில காலத்துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த கரண் குமார் வருமானமில்லாமல் சிரமப்பட்டிருக்கிறார்.

இந்தநிலையில் கரண் குமார் நேற்று நள்ளிரவு மணியக்காரன் பாளையம் அருகேயுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் அந்த வழியாகச் சென்றவர்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அந்தப் பகுதிக்கு ஆட்டோவில் மூன்று பேர் வந்திருக்கிறார்கள். ஆட்டோவை வழிமறித்த கரண் குமார், அவர்களை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றிருக்கிறார்.

சடலமாக
சடலமாக

இதில், ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேரும் ஆத்திரமடைந்து, கரண் குமாரை மீன்வெட்டும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியிருக்கிறார்கள். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெளடி கரண் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்த முத்து கணேஷ், ரவி சங்கர், சீனிவாசன் ஆகிய மூவரும் அவர்களாகவே சரவணம்பட்டி போலீஸில் ஆஜராகிவிட்டனர். இந்த மூவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவும் செய்திருக்கிறார்கள். இவர்கள், கரண் குமாரால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.

எனவே, முன்விரோதம் காரணமாக திட்டமிட்டுக் கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். நள்ளிரவில் நடந்த கொலையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு