Published:Updated:

கோவைப் பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை! - சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்

கோவையில், வித்ய விகாஸ் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரீஸ்
ஹரீஸ்

கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார். இறைச்சி வியாபாரி. இவரது மகன் ஹரீஸ். இவர் காரமடை கண்ணார்பாளையத்தில் செயல்பட்டு வரும் வித்ய விகாஸ் பள்ளியில் 11-ம் வகுப்பு கணினி அறிவியல் துறையில் படித்து வந்தார்.

தற்கொலை
தற்கொலை

ஹரீஸ் விடுதியில் தங்கிப் படித்து வந்தநிலையில், நேற்று மாலை தனது அறை மின்விசிறியில் ஹரிஷ் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மாணவர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரமடை காவல்துறையினர் உயிரிழந்த ஹரீஸின் உடலைக் கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை
தற்கொலை

பின்னர், காரமடை காவல் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் காவல்துறையினரிடம், எங்களுக்கு உரிய தகவல் அளிக்காமல் ஹரீஸின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது தொடர்பாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

`உங்க பொண்ணு  தற்கொலை பண்ணிகிட்டா!' - கரூரில் பெண் வீட்டாரைப் பதறவைத்த போன்

இந்நிலையில், இந்தப் பள்ளி நிர்வாகம் மிகவும் கண்டிப்புடன் செயல்படுவதாகவும், அதனாலேயே ஹரீஸ் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஹரீஸ்க்கு முன்பு மற்றொரு மாணவரும் அந்தப் பள்ளியில் தற்கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் பள்ளி நிர்வாகம், `வயிறு வலிக்கிறது என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு ஹரீஸ் மதியமே விடுதிக்குச் சென்றுவிட்டார். மாலை, சக மாணவர்கள் பார்த்தபோதுதான் விஷயம் தெரியவந்தது' என்று தெரிவித்துள்ளனர்.