Published:Updated:

`எப்படி எங்களை முறைக்கலாம்?!' - கொலையில் முடிந்த கோவை பள்ளி மாணவர்கள் மோதல்

கொலை
News
கொலை ( (சித்திரிக்கப்பட்ட படம்) )

கோவை பள்ளி மாணவர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 16 வயது மாணவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

கோவை ஆலந்துறை அருகே பூலுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அங்கு 11-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கடந்த வாரம் 16 வயது மாணவர்கள் இருவரை, எதிர்ப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முறைத்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

கோவை
கோவை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து 16 வயது மாணவர்கள் தரப்பில் அவர்களிடம் கேட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த விஷயத்தை அந்த எதிர்த்தரப்பு மாணவர்கள்,17 வயதான அதே பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவனிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களிடம் மீண்டும் பிரச்னை செய்துள்ளனர். அப்போது இரண்டு பிரிவினரையும் ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பியுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது முன்னாள் மாணவனின் தலைமையில் சென்று மீண்டும் பிரச்னை செய்துள்ளனர்.

கத்திக் குத்து
கத்திக் குத்து
சித்திரிக்கப்பட்ட படம்

கெட்ட வார்த்தையில் திட்டி, ‘செத்துப்போடா’ என்று சொல்லியபடி கத்தியால் குத்தியுள்ளனர். இதைத் தடுக்க வந்தவர்களையும், ‘கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் மூன்று மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. முக்கியமாக 16 வயது மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்து போலீஸார் விசாரித்துவந்தனர். கத்தியால் குத்திய மாணவர்களைப் பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

இந்நிலையில், பலத்த காயமடைந்த மாணவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீஸார் இதைக் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.