Published:Updated:

கோவை மாணவி வழக்கு: மழுப்பும் பள்ளி நிர்வாகம்... ஆய்வுக்கு செல்லும் கடிதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு ( representational image )

கோவை மாணவி வழக்கில் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதிலை தருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை காரணமாக, கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இந்நிலையில் காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
`அந்தக் கடிதத்தில் உள்ளவர்கள்தான் அடுத்த டார்கெட்!’ -கோவை மாணவி வழக்கில் போலீஸ் ஸ்கெட்ச்

அப்போது அவர், “மாணவி பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக சென்ற போது, பள்ளி நிர்வாகம் மலுப்பலான பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளோம். பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹெல்ப்லைன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுதொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது.

பாலியல் துன்புறுத்தல்
பாலியல் துன்புறுத்தல்

எனவே, அதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவி எழுதி வைத்த கடிதத்தில் இருப்பது யார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், மாணவி வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட கடிதத்தைத் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

கடிதம்
கடிதம்

முக்கியமாக, அந்த கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா என்பதை உறுதிபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடிதத்தில் மாணவி குறிப்பிட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு