Published:Updated:

தொழில் போட்டி காரணமா? - ஹோட்டல் நடத்திவந்த திருநங்கை கொலை; கோவை அதிர்ச்சி

திருநங்கை சங்கீதா
திருநங்கை சங்கீதா

கோவையில் `டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்திவந்த திருங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருங்கைகள் என்றாலே சாலையில் பிச்சையெடுப்பார்கள், பாலியல் தொழில்களில் ஈடுபடுவார்கள் என்ற பார்வை படிப்படியாக ஒழிந்துவருகிறது. பல்வேறு துறைகளில் திருநங்கைகள் தடம்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சங்கீதா. கோவைச் சுற்றுவட்டாரங்களில் திருநங்கைகள் கேட்டரிங் தொழில்களில் ஈடுபடுவது வழக்கம்.

டிரான்ஸ் கிச்சன்
டிரான்ஸ் கிச்சன்
திருச்சி: பாலியல் தொல்லை; மிரட்டல்! - காவலர் பயிற்சிப் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை

ஆனால், கொரோனா ஊரடங்கு அதற்கும் சிக்கலை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவராக இருந்த சங்கீதா மனம் தளரவில்லை. பல்வேறு இடங்களிலிருந்து நிதி திரட்டினார்.

அந்த நிதியைவைத்து சில மாதங்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் `டிரான்ஸ் கிச்சன்’ என்ற ஹோட்டலைத் தொடங்கினார். இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் திருநங்கைகளை. தமிழகத்தில் திருநங்கைகளால் நடத்தப்படும் முதல் ஹோட்டலும் இதுதான். குறுகியகாலத்திலேயே இந்த ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திருநங்கை சங்கீதா சடலமாக
திருநங்கை சங்கீதா சடலமாக

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கிரேவி, பரோட்டா என்று அனைத்து உணவுகளிலும் தனித்துவமான சுவையைக் கொடுக்க, ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடியது.

ஆனால், கடந்த இரண்டு நாள்களாக சங்கீதா ஹோட்டலுக்குச் செல்லவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. இதனால், சாய்பாபா காலனியிலுள்ள அவரது இல்லத்துக்கு திருநங்கைகள் நேரில் சென்றனர். அங்கு சென்ற திருநங்கைகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தண்ணீர் நிரப்பும் ஓர் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வந்திருக்கிறது.

திருநங்கை சங்கீதா உடல்
திருநங்கை சங்கீதா உடல்

அதில் சங்கீதாவின் உடல் அழுகிய நிலையில் அடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த திருநங்கைகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

கோவை யு.டி.எஸ், திருச்சி எல்ஃபின்... மக்களே உஷார்..! - போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா?

சங்கீதா தொழில் போட்டி காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தநிலையில், சங்கீதா கொலை செய்யப்பட்ட தகவலறிந்து திருநங்கைகள் சாய்பாபா காலனிப் பகுதியில் குவிந்தனர். இது குறித்து திருநங்கைகள் கூறுகையில்,``கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரிடம் பேசினோம். அதன் பிறகு அவர் யாரிடமும் பேசவில்லை.

திருநங்கைகள்
திருநங்கைகள்

செல்போனும் ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது. அதனால்தான், நேரில் வந்து பார்த்தோம். சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் ஹோட்டலில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களையும் காணவில்லை. எனவே, அவர்கள் மீதும் சந்தேகமாக இருக்கிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு