கோவை, பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (49). இவர் துடியலூர் அருகே ஓர் உணவகத்தில் பணியாற்றிவந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தர்மலிங்கம், தன் நண்பருடன் சேர்ந்து இரவு நேரத்தில் துடியலூர் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் உறவுக்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது திருநங்கை ரேஸ்மிகாவுடன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த அருகிலிருந்த திருநங்கைகள் மம்தா, கௌதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். இதில் அடி தாங்க முடியாமல் தர்மலிங்கத்துடன் வந்தவர் அங்கிருந்து ஓடிவிட,

தர்மலிங்கம் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார். படுகாயமடைந்த தர்மலிங்கம், இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்துவிட்டதாகச் சொல்லி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.
இது குறித்து போலீஸ் விசாரித்தபோது, தர்மலிங்கம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். பிறகு தர்மலிங்கம் உண்மையைக் கூறியிருக்கிறார். போலீஸார் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

அதையடுத்து இது தொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த துடியலூர் போலீஸார், திருநங்கைகள் ரேஸ்மிகா, மம்தா, கௌதமி, ஹர்னிகா, ரூபி ஆகியோரைக் கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கீர்த்தி என்ற திருநங்கையைத் தேடிவருகின்றனர்.