Published:Updated:

`அந்த உறவை அவர் விடவில்லை..!' - கணவனை கொல்ல கூலிப்படையை ஏவிய கோவை பெண் கைது

திருமணத்தை மீறிய உறவை கை விடாததால் கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்த கோவை பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணி - திலகவதி. சுப்பிரமணி சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சுப்பிரமணி, கடந்த நில நாள்களுக்கு முன்பு ஓர் ஹோட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார்.

சுப்பிரமணி
சுப்பிரமணி
கோவை: கருகிய தோசை;  மனைவியுடன் தொடர் தகராறு! - விபரீத முடிவெடுத்த கணவர்

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சுப்பிரமணியை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி தப்பி சென்றுவிட்டனர். சுப்பிரமணி மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தொழில் பிரச்னை காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் தகவல் வெளியானது. ஆனால், மனைவி திலகவதியிடம் விசாரணை நடத்தி பிறகுதான் வழக்கின் திசை மாறியுள்ளது.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

போலீஸாரின் கேள்விகளுக்கு, திலகவதி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், “கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்தேன்” என திலகவதி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“என் கணவர் சுப்பிரமணிக்கும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. பலமுறை கண்டித்தும் அவர் அதை கைவிடவில்லை. தொழிலில் வரும் வருமானத்தையும் அந்தப் பெண்ணுக்கே கொடுத்து வந்தார்.

திலகவதி
திலகவதி

இதுகுறித்து கேட்டதற்காக என்னையும் பலமுறை தாக்கியுள்ளார். இதில் நான் மிகுந்த மனவேதனையடைந்தேன். அதனால் அவரை கொலை செய்ய வேலாயுதமூர்த்தி என்பவரிடம் 50,000 ரூபாய் கொடுத்தேன்” என்று அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

மகன் கொலை வழக்கில் கைதான அம்மா! ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

இதைத்தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த கூலிப்படையினர் கமல்குமார், பிரபாகரன் ஆகியோர் சுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஹோட்டலுக்கு சென்று வரும்போது தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணி கீழே விழுந்துள்ளார்.

அதனால், அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பியுள்ளர். இந்த வழக்கு தொடர்பாக வேலாயுதமூர்த்தி, கமல்குமார், பிரபாகரன், திலகவதி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு