Published:Updated:

`காளி’ படம்: லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்த இந்து அமைப்பின் நிர்வாகி `அதிரடி சரஸ்வதி’ கைது

கைதுசெய்யப்பட்ட அதிரடி சரஸ்வதி

`காளி’ படம் போஸ்டர் சர்ச்சையில், இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்த கோவை இந்து அமைப்பின் நிர்வாகி `அதிரடி’ சரஸ்வதி என்கிற பெண் கைதுசெய்யப்பட்டார்.

`காளி’ படம்: லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்த இந்து அமைப்பின் நிர்வாகி `அதிரடி சரஸ்வதி’ கைது

`காளி’ படம் போஸ்டர் சர்ச்சையில், இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்த கோவை இந்து அமைப்பின் நிர்வாகி `அதிரடி’ சரஸ்வதி என்கிற பெண் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட அதிரடி சரஸ்வதி

மதுரையைச் சேர்ந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கத்தில் `காளி’ என்கிற டெலிஃபிலிம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.

காளி
காளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் காளி வேடத்தில் இருக்கும் பெண் புகைபிடிப்பதுபோல் இருப்பதற்கு, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. டெல்லி காவல்துறை மணிமேகலை மீது வழக்கு பதிவும் செய்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, போஸ்டர் குறித்து மணிமேகலை விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையே கோவையைச் சேர்ந்த சஷ்டி சேனா என்கிற இந்து இயக்கத்தின் தலைவி அதிரடி சரஸ்வதி,

அதிரடி சரஸ்வதி
அதிரடி சரஸ்வதி

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் மணிமேகலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.

இந்த வீடியோவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்துவந்தனர். இந்நிலையில் ஆபாசமாகப் பேசுதல்,

கைது
கைது

கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீஸார் சரஸ்வதியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.