Published:Updated:

கோவை: ஜோதிடர் சொன்னதை நம்பி மகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட தாய்?! - போலீஸ் விசாரணை

கோவை
News
கோவை

கோவை துடியலூர் அருகே மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அருகேயுள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் தனது மகளுடன் வசித்துவந்தார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.

தனலட்சுமி
தனலட்சுமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனலட்சுமியின் மகன் சசிக்குமார் திருமணமாகி அவர் குடும்பத்துடன் சரவணம்பட்டியில் வசித்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு தனலட்சுமி மகன் சசிக்குமாரை செல்போனில் தொடர்புகொண்டிருக்கிறார்.

அப்போது, ``நான் ஒரு ஜோதிடரை அணுகினேன். அவர் எனக்கு உடல்நலம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருங்கள்” என்று கூறினார். ``அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் உன்னால், என்னையும் சகோதரியையும் பார்த்துக்கொள்வது கடினம்” என்று மகனிடம் வருத்தப்பட்டிருக்கிறார்.

செல்போன் அழைப்பு
செல்போன் அழைப்பு

சசிக்குமார், ``அப்படி எதுவும் ஆகாது. ஒருவேளை ஏதாவது நிகழ்ந்தால்கூட உங்களை நான் பார்த்துக்கொள்வேன்” என்று ஆறுதல் அளித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தனலட்சுமி சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து சசிக்குமார் செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டபோது தனலட்சுமி எடுக்கவில்லை. இதையடுத்து, அருகில் உள்ளவர்களிடம் சொல்லிப் பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. உடனடியாக அவரும் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

சடலம்
சடலம்

தனலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன்பு, மகளுக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.