ஈரோடு மாவட்டம், கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்துவருகிறார்.

அங்கிருந்தபடியே, சிமென்ட், டைல்ஸ் கடையில் வேலை பார்த்துவருகிறார். கடை உரிமையாளர் வீடு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ளது. திடீரென உரிமையாளர் வீட்டுக்கு வந்த பெண், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

தொடக்கத்தில் அந்தப் பெண் நீண்ட நாள்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற கடையின் உரிமையாளரிடம், பணம் கேட்டு அவர் வீட்டுக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது. அவர் பணம் கொடுக்க மறுக்கவே பெண் தீக்குளித்ததாகக் கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து அந்தப் பெண் கடிதம் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ``நான் கடந்த 11 ஆண்டுகளாக ‘விநாயகா செராமிக்ஸ் என்ற சிமென்ட் அண்ட் டைல்ஸ்’ கடையில் வேலை பார்த்துவருகிறேன். கடை உரிமையாளர் நவநீதன் என் குடும்பச்சூழலை பயன்படுத்தி என்னை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துவந்தார்.

இந்த விஷயம் அவர் மனைவிக்கும் தெரியும். அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதன் காரணமாக என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பார். இது குறித்து அவர் உறவினர்களிடம் சொன்னபோது, அவர்களும் என்னை மிரட்டினர்.
என்னைப்போல அப்பாவிப் பெண்கள் வாழ்க்கையில் இனிமேல் இது போன்று நடக்கக் கூடாது. எனக்கு ஆறு முறை கருக்கலைப்பு நடந்துள்ளது. என் மரணத்துக்கு நவநீதன் மற்றும் அவர் குடும்பத்தினர்தான் காரணம். என் குடும்பத்துக்கு எதுவும் தெரியாது. அவர்கள் பணபலம் உள்ளவர்கள். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இனிமேல் அப்பாவிகளை இழக்கக் கூடாது.

கடைசி இறப்பு நானாக இருக்க வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுவரை அவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் பொய் சொன்னால் ஏற்றுக்கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸாரிடம் கேட்டபோது, ``பாலியல் தொல்லை காரணமாகவும் அந்தப் பெண் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதன் காரணமாக, இந்த வழக்கில் கொலைக்குத் தூண்டியதாக சில பிரிவுகளை மாற்றி விசாரித்துவருகிறோம்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.