Published:Updated:

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பதிவு - கோவை இளைஞர் கைது

கோவை இளைஞர் கைது

முகநூலில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கோவை இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பதிவு - கோவை இளைஞர் கைது

முகநூலில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கோவை இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கோவை இளைஞர் கைது

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் முகமது நபிகள் குறித்து வெளியிட்ட கருத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. அரபு நாடுகள் தொடங்கி, அரசியல் கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்துவருகின்றன.

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துவருகின்றன. அதேநேரத்தில் சிலர் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருவது இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்குகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நுபுர் ஷர்மாவை இடை நீக்கம் செய்தும், நவீன்குமாரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கியும் பாஜக உத்தரவிட்டது. இந்நிலையில் கோவை சென்னனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (24) என்கிற இளைஞர்,

கார்த்தி
கார்த்தி

தன் முகநூல் பக்கத்தில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார். அது இரண்டு தரப்புக்கிடையே பகை உணர்வை ஏற்படுத்தும்விதமாக இருப்பதாகப் புகார் எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பகை உணர்வைத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரைக் கைதுசெய்தனர்.

கார்த்தி கைது
கார்த்தி கைது

கைதுசெய்யப்பட்ட கார்த்தி பாஜக மற்றும் வலதுசாரி கொள்கைக்கு ஆதரவாகத் தொடர்ந்து பதிவிட்டுவந்திருக்கிறார். பாஜக, வலதுசாரி அமைப்புகள் அவர் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism