Published:Updated:

`திருமணத்துக்கு சம்மதித்த பெற்றோர்; காதலன் நடவடிக்கையில் மாற்றம்!’- இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இளம்பெண் நந்தினி
இளம்பெண் நந்தினி

கோவையில் திருமணம் செய்ய மறுத்த காதலியின் வாயில் சாணிப் பவுடர் விஷம் ஊற்றி கொலை செய்த காதலனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அடுத்த கீரணநத்தம் கல்லக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் - ராமாத்தாள் தம்பதி. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு நந்தினி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். நந்தினி கோவை அரசு கலைக்கல்லூரியல் இறுதியாண்டு பயின்று வந்தார். நந்தினியும் கணபதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் பள்ளிப் பருவம் முதல் காதலித்து வந்தனர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் நந்தினியின் தாய் ராமாத்தாள் இருவரின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

தினேஷ்
தினேஷ்

ஆனால், நந்தினியின் கல்லூரி படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் எனக் கூறியிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தினேஷின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த நந்தினி பேச மறுத்ததுடன் திருமணம் செய்யவும் மறுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்திலிருந்தவர் நேற்று மாலை வீட்டில், நந்தினியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் புகுந்த தினேஷ் மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், நந்தினியின் கழுத்தை நெரித்ததுடன் அவரது வாயில் சாணிப்பவுடர் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், நந்தினி உடலில் காயங்களுடன் தரையில் மயக்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, நந்தினியை மீட்ட அவளின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நந்தினி இன்று உயிரிழந்தார்.

நந்தினியின் குடும்பத்தினர்
நந்தினியின் குடும்பத்தினர்

இதனிடையே, தப்பி ஓடிய தினேஷ் அவரின் பாட்டி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தினேஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோவில்பாளையம் போலீஸார் தினேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

அடுத்த கட்டுரைக்கு