Published:Updated:

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

தற்கொலை செய்த இளைஞர் மதன்குமார்
தற்கொலை செய்த இளைஞர் மதன்குமார்

ஆன்லைன் ரம்மியில் தோற்று பணம் இழந்ததால், கோவை இளைஞர் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மதன்குமார் (28). இவர் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மதன்குமார் ஆன்லைனில் மூழ்கியிருந்திருக்கிறார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி: எதிர்ப்புறம் விளையாடுவது யார் தெரியுமா? - விளக்கும் சைபர் க்ரைம் அதிகாரி

ஆரம்பத்தில் பணம் நிறைய சம்பாதித்த மதன், பிறகு தோற்றிருக்கிறார். முக்கியமாக, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அடிமையே ஆகிவிட்டார். இதனால், ஆன்லைனில்விட்ட பணத்தை மீண்டும் பிடிப்பதற்காகக் கடன் வாங்கி விளையாடியிருக்கிறார்.

ஆனால், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த மதன்குமார் மனவிரக்தியில் இருந்திருக்கிறார். இதையடுத்து, மதன்குமார் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து புடவையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மதன்குமார் தற்கொலைச் சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த 10 நாள்களில் மூன்றாக உயர்ந்திருக்கிறது.

“ஆன்லைன் கேம்களை ஆஃப் பண்ணி விட்டுடு மதுமிதா!” - உயிர் குடிக்கும் ரம்மி...

இதையடுத்து, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்து, மேற்கொண்டு தற்கொலைகள் நடக்காத வண்ணம் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.

மதன்குமார் சடலமாக
மதன்குமார் சடலமாக

`ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும்’ என ஏற்கெனவே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு