Published:Updated:

கோவையில் கேங்வார்?! - 5 கி.மீ தூரம் பைக் சேஸிங்... வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்!

கொலை
News
கொலை

கோவை இளைஞர்களிடையே ஏற்பட்ட கேங்வாரில் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கோவை ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரின் மகன் பெயர் ஶ்ரீராம் (21). நண்பர்களால் குரங்கு ஶ்ரீராம் என்றழைக்கப்படுவார். ஶ்ரீராம் தனது நண்பர் கவாஸ்கானுடன் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட ஶ்ரீராம்
கொலை செய்யப்பட்ட ஶ்ரீராம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது அவர்களை மூன்று பைக்குகளில் வந்த சில இளைஞர்கள் பின் தொடர்ந்து விரட்டியுள்ளனர். கிட்டத்தட்ட 5 கி.மீ தொலைவுக்கு சேஸிங் தொடர்ந்துள்ளது.

இரவு 8.30 மணியளவில் சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் அருகே செல்லும்போது ஶ்ரீராமை அந்த இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். பிறகு, பைக்கில் வந்த 6 இளைஞர்களும் பொது மக்கள் முன்னிலையில் ஶ்ரீராமை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஶ்ரீராம்
கொலை செய்யப்பட்ட ஶ்ரீராம்

இதில் கை, கால் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த ஶ்ரீராமை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடல்நிலை மோசமடைந்திருந்ததால் மருத்துவர்கள், ஶ்ரீராமை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஶ்ரீராம் உயிரிழந்துவிட்டார். முதல் கட்ட விசாரணையில்,

சடலமாக
சடலமாக

ரத்தினபுரி மற்றும் கண்ணப்ப நகர் இடையே நடைபெற்ற கேங்வார் கொலையில் முடிந்ததாக தெரியவந்துள்ளது. “கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம்” என்று போலீஸார் கூறியுள்ளனர்.