Published:Updated:

``பணம் கட்டி கஷ்டப்படுகிறீர்கள், அதனால்..!" - மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி

தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சென்னை தனியார் கல்லூரியில் பயிலும் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

``பணம் கட்டி கஷ்டப்படுகிறீர்கள், அதனால்..!" - மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி

சென்னை தனியார் கல்லூரியில் பயிலும் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

Published:Updated:
தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

சென்னை அருகிலுள்ள பல்லாவரம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்துவருகிறார். 19 வயதான இவர் டி-பார்ம் 4-ம் ஆண்டு படித்துவந்தார். இவர் ஜமீன் பல்லாவரம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, கல்லூரிக்குச் சென்றுவந்திருக்கிறார். அந்த அறையில் இவருடன் இரண்டு பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை

இந்த நிலையில், அந்த மாணவி திடீரென்று தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சம்பவம் அறிந்து வந்த பல்லாவரம் பகுதி காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதற்கட்ட விசாரணையில், மாணவி இறப்பதற்கு முன்பாக அவரின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், ``என்னால் கல்லூரியில் நன்றாகப் படிக்க முடியவில்லை. நீங்கள் பணம் கட்டி என்னைப் படிக்கவைக்க மிகவும் கஷ்டப்படுகிறீர்கள். அதனால் நான் உங்களைவிட்டுச் செல்கிறேன்" என்று மெசேஜ் அனுப்பியிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை
தற்கொலை
மாதிரிப் படம்

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. படிக்க முடியாத காரணத்தால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism