Published:Updated:

நகையுடன் எஸ்கேப்; முன்னாள் காதலனை இன்னாள் காதலன் மூலம் பழிவாங்கிய கல்லூரி மாணவி - எச்சரித்த போலீஸ்

மண்டைக்காடு காவல் நிலையம்

காதலைப் பற்றி பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துவிட்டதாகவும், அதனால் தனக்கு வீட்டில் பிரச்னை ஆகிவிட்டதாகவும் சதீஷ்குமாரிடம் கூறி அழுதிருக்கிறார் மாணவி. காதலியின் கண்ணீரைப் பார்த்ததும் சதீஷ்குமாருக்கு ஆத்திரம் பொங்கியது.

நகையுடன் எஸ்கேப்; முன்னாள் காதலனை இன்னாள் காதலன் மூலம் பழிவாங்கிய கல்லூரி மாணவி - எச்சரித்த போலீஸ்

காதலைப் பற்றி பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துவிட்டதாகவும், அதனால் தனக்கு வீட்டில் பிரச்னை ஆகிவிட்டதாகவும் சதீஷ்குமாரிடம் கூறி அழுதிருக்கிறார் மாணவி. காதலியின் கண்ணீரைப் பார்த்ததும் சதீஷ்குமாருக்கு ஆத்திரம் பொங்கியது.

Published:Updated:
மண்டைக்காடு காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை ஒரு கும்பல் தாக்கியதாக கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில், ஐந்து பேரைக் கைதுசெய்த காவல்துறை, கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளது. என்ன நடந்தது என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷைஜூ (19). இவருக்கு வாகவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். கடந்த ஓர் ஆண்டாக இவர்கள் காதலித்துவந்துள்ளனர். மாணவி வசதியான வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் ஷைஜூவுக்கு விலையுயர்ந்த பரிசுகள், பாக்கெட் மணி எனக் கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

மாணவியிடம் பெரிதாக ஒரு தொகையை வாங்கிவிட நினைத்த ஷைஜூ, தனக்கு அவசரச் செலவுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அவருடைய தங்கச் சங்கிலி, மோதிரம் என நான்கு சவரன் தங்க நகைகளை கழற்றி வாங்கியுள்ளார். அதன் பிறகு கல்லூரி மாணவியுடனான தொடர்பை துண்டித்துவிட்டாராம் ஷைஜூ. மாணவி பலமுறை செல்போனில் தொடர்புகொண்டும் ஷைஜூ தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை.

கைதான இரண்டாவது காதலன் சதீஷ்குமார்
கைதான இரண்டாவது காதலன் சதீஷ்குமார்

இந்த நிலையில் அந்தக் கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கருங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு வாலிபருடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருப்பினும், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் மீதான கோபம் அந்த மாணவியின் மனதுக்குள் கனன்றுகொண்டு இருந்திருக்கிறது. எனவே, புதிய காதலன் சதீஷ்குமார் மூலம் பழிவாங்க முடிவு செய்தார் மாணவி. தனக்கு ஷைஜூ என்ற நண்பன் இருந்ததாகவும், அவன் 4 பவுன் நகையை பறித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், அவன் நம் காதலைப் பற்றி பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துவிட்டதாகவும், அதனால் தனக்கு வீட்டில் பிரச்னை ஆகிவிட்டதாகவும் சதீஷ்குமாரிடம் கூறி அழுதிருக்கிறார் மாணவி. காதலியின் கண்ணீரைப் பார்த்ததும் சதீஷ்குமாருக்கு ஷைஜூ மீது ஆத்திரம் பொங்கியது. சதீஷ்குமார் கடந்த மாதம் 20-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஷைஜூ-வைக் கடத்தியிருக்கிறார். பின்னர் மண்டைக்காட்டில் ஒரு இடுகாட்டுப் பகுதிக்கு ஷைஜூ-வைக் கொண்டு சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளார் சதீஷ்குமார்.

மண்டைக்காடு காவல் நிலையம்
மண்டைக்காடு காவல் நிலையம்

அடி வாங்கிக்கொண்டு அமைதியாகத்தான் இருந்திருக்கிறார் ஷைஜூ. ஆனால், சதீஷ்குமார் தரப்பு ஷைஜூ மீது தாக்குதல் நடத்தியதை வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பரவவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது பரவியதை அடுத்து, ஷைஜூ மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், மாணவியின் இரண்டாவது காதலன் சதீஷ்குமார், அவருடைய நண்பர்கள் ஆனந்தராஜ், விஷ்ணு, சஞ்சய், ராகுல் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்தனர். இதற்கெல்லாம் காரணமான மாணவியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து, எச்சரிக்கை செய்து அனுப்பியது போலீஸ். முன்னாள் காதலனை பழிவாங்க, இன்னாள் காதலனைப் பயன்படுத்திய மாணவியின் செயல் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism