Published:Updated:

க்ரைம் டேப்ஸ்: உயிர் நண்பனை கொன்ற வழக்கு... தொழிலதிபரை ஜெயிலுக்கு தள்ளிய கல்லூரி காதல் | பகுதி 9

அவர்கள் படித்த அதே வகுப்பில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மீனா என்ற பெண் படித்துக் கொண்டிருந்தார்.

கோவை பத்திரிகையில் பணியாற்றும் போது கோவை சிறையில் உள்ள கைதிகள் சிலரைப் பற்றியும் அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பற்றியும் தகவல்கள் சேகரிக்கத் தொடங்கி இருந்தேன். அப்போது சிறையில் இருந்த ஒரு கைதியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் எனக்குக் கிடைத்தது.

அவர் பெயர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவருக்கு அப்போது 40 வயதுக்குள் தான் இருக்கும். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அவர். பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர். அவர் பெயரில் பல கல்வி நிறுவனங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. அவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

சிறை
சிறை

தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவன் சுரேந்தரனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கண்ணனும் சுரேந்தரனும் உயிர்த் தோழர்கள். அந்தக் கொலைக்குக் காரணம் ஒரு காதல் விவகாரம் என்ற அறிந்தபோது அந்த சம்பவத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற என் ஆர்வம் அதிகமானது. அந்தக் கொலை சம்பவம் பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன்.

கோவையின் பிரபலமான ஒரு கல்லூரியில் கண்ணனும் சுரேந்திரனும் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஏற்கெனவே சொன்னது போல கண்ணன் பரம்பரை பணக்காரர். சுரேந்திரனும் வசதியானவர் தான் என்றாலும் கண்ணன் அளவுக்கு இல்லை. அவர்கள் படித்த அதே வகுப்பில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மீனா என்ற பெண் படித்துக் கொண்டிருந்தார். கண்ணனும் சுரேந்திரனும் நண்பர்கள். அவர்களுடன் மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மூன்று பேரும் இணை பிரியாத நண்பர்கள் ஆகினர்.

க்ரைம் டேப்ஸ்: `அந்த ஒற்றை வார்த்தை..!' -பெண்களிடம் கோடிகளில் பணத்தை அள்ளிய இளைஞர் | பகுதி 7

அந்தக் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் ஏக்கப் பெருமூச்சு விடும் அளவுக்கு மீனா அழகானவர். அவள் அழகில் மயங்கிய எத்தனையோ பேர் அவளுக்கு காதல் தூது விட்டிருக்கிறார்கள். ஆனால் மீனா யாரையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

நண்பர்களாக பழகி வந்த கண்ணனுக்கு மீனாவை மிகவும் பிடித்துப் போனது. அவளை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் விதி வேறு மாதிரியான முடிவு செய்திருந்தது. கண்ணன் மீனாவிடம் தன் காதலை சொல்வதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் மீனாவும் சுரேந்திரனும் கண்ணனிடம் வந்து நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

காதல்
காதல்
மாதிரிப் படம்

கண்ணன் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சுரேந்திரனும் மீனாவும் திருமணம் செய்து கொண்டனர். கண்ணனும் வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சுரேந்திரன் தன் குடும்ப நிறுவனமான பைனான்ஸ் கம்பெனியை நிறுவகித்துக் கொண்டிருந்தார்.

கண்ணன் தன் பெயரில் உள்ள கல்லூரிகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் கண்ணன் மனதில் மீனா மீது கொண்டிருந்த காதல் மட்டும் அணையாமல் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. கல்லூரி நண்பர்களான சுரேந்திரன் மீனா கண்ணன் மூவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தனர். ஒரு முறை வீட்டில் தனியாக இருந்த மீனாவிடம் கண்ணன் தவறாக நடக்க முயல மீனா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

கண்ணனின் நடத்தையால் அதிர்ச்சி அடைந்த மீனா அது பற்றி தன் கணவன் சுரேந்திரனிடம் சொல்லி அழுதிருக்கிறார். இந்த விவகாரம் கண்ணனின் மனைவிக்குத் தெரியவர அவர் கோபித்துக் கொண்டு கண்ணனை பிரித்து சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் 90களின் தொடக்கத்தில் ஒரு நாள் கோவை நகர்ப்பகுதியில் பரபரப்பான சாலையில் சுரேந்தரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கூலிப்படையை ஏவி சுரேந்தரை கொன்றதாக கண்ணன் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

க்ரைம் டேப்ஸ்: காவல்துறையின் பொய் வழக்கால் தவித்த பிரபல கல்லூரி முதல்வர்; என்ன நடந்தது? | பகுதி 8

கணவனை இழந்த மீனா கணவனின் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டார். கோடீஸ்வர வீட்டுப் பிள்ளை. வசதியாக வாழ்ந்தவர். சிறையில் நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் கண்ணன் சிறைக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு பெண்ணின் கனவுகளையும் இரு நண்பர்களின் உயிரையும் காவு வாங்கிய அந்த காதல் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது!

தொடரும்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு