Published:Updated:

`செயினைத் திருடுவேன்; விருப்பம்போல் வாழ்வேன்' - கல்லூரி மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

சென்னையில் நண்பர்களுடன் இணைந்து செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவன், அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

செயின் பறிப்பு கொள்ளையர்கள்
செயின் பறிப்பு கொள்ளையர்கள்

சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கடந்த 28-ம் தேதி தன்னுடைய அத்தையைத் திருவான்மியூரில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். எல்.பி.சாலையில் வினோத்குமார் வந்தபோது 5 பேர் கத்தியைக் காட்டி பைக்கை வழிமறித்தனர். பிறகு, கத்திமுனையில் வினோத்குமார் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயின் மற்றும் செல்போனை அவர்கள் பறித்துவிட்டுத் தப்பினர்.

செயின் பறிப்பு கொள்ளையர்கள்
செயின் பறிப்பு கொள்ளையர்கள்

இதுதொடர்பாக வினோத்குமார், திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தரமணி போலீஸ் உதவி கமிஷனர் பி.கே.ரவி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் அன்புக்கரசன், இசக்கி பாண்டியன் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி பிரகாஷ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு டூவீலர்களின் நம்பர்கள் தெளிவாக சிசிடிவியில் தெரிந்தது. அதைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி விக்ரம், தினேஷ், வெள்ளை சிவா, நவீன், பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து செயின் மற்றும் டூவீலர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செயின் பறிப்பு கொள்ளையர்கள்
செயின் பறிப்பு கொள்ளையர்கள்
Vikatan

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செயின் வழி செய்த வழக்கில் கைதான விக்ரம், எலக்ட்ரீசியனாகப் பணியாற்றுகிறார். தினேஷ், பி.காம் 2-ம் ஆண்டு படித்துவருகிறார். மற்ற மூன்று பேரும் ஏ.சி.மெக்கானிக்காகப் பணியாற்றுகின்றனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்று ஒரு பைக்கில் மூன்று பேரும் இன்னொரு பைக்கில் இரண்டு பேரும் சென்றுள்ளனர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் முகத்தை மட்டும் துணியால் மறைத்தபடி பைக்கில் செல்கின்றனர். குற்றச் செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் விருப்பம் போல வாழ்ந்ததாக தினேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்" என்றனர்.