Published:Updated:

குடித்துவிட்டு தகராறு செய்த தந்தை; தீவைத்து தற்கொலைக்கு முயன்ற மகள்! - மதுரை சோகம்

டாஸ்மாக் (Representational Image)
டாஸ்மாக் (Representational Image) ( என்.ஜி.மணிகண்டன் )

தந்தையின் செயலைப் பார்த்து வெறுப்படைந்த அவரின் மகள் கல்லூரி மாணவியான அர்ச்சனா, தன் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுதும் அடைக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் 40 நாள்கள் கழித்து இன்று திறக்கப்பட்ட நிலையில், குடித்துவிட்டு தகராறு செய்த கணவனின் கொடுமை தாங்காமல் மனைவியும் மகளும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரை மாவட்டத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கொரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருந்து வந்தன. பலர் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர். மது விலக்கு கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று கடைகளைத் திறந்தது தமிழக அரசு.

மது வாங்குவோருக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை அறிவித்தாலும் இன்று காலை முதல் அனைத்து மதுக்கடைகள் முன்பும் மக்கள் வரிசையில் நின்று வாங்கிவிட்டார்கள். பல இடங்களில் மதுக்கடைக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்தன.

Representational Image
Representational Image

இந்த நிலையில் அலங்காநல்லூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமரன் மதுக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். குடித்தது பற்றி கேள்வி எழுப்பிய மனைவி பரமேஸ்வரியிடம் போதையில் சிவக்குமரன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

தந்தையின் செயலைப் பார்த்து வெறுப்படைந்த அவரின் மகள் கல்லூரி மாணவியான அர்ச்சனா, தன் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பரமேஸ்வரி, மகளைக் காப்பாற்ற தீயை அணைக்கப் போராடியபோது அவர் உடம்பிலும் தீக்காயம் ஏற்பட்டது.

டாஸ்மாக்
டாஸ்மாக்
என்.ஜி.மணிகண்டன்

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். சீரியஸான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பற்றி அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுக்கடை திறந்த முதல் நாளே மதுவால் தாயும் மகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு